சாதி ஒழி மதம் அழிசாதி பொங்கல் சிறப்பு கவிதை போட்டி 2015

மண் மனம் வீசும் தமிழ் மண்ணிலே
தவழ்து வந்த மன்னவர்களே
நீ ஏன் மதிகெட்டாய்
சாதி என்னும் போதையில் மிதக்கிறாய்
அன்று உன்னை
நீ செய்த தொழில்கள் வைத்து சாதிகளாகினர்
இன்று
நீ சாதிக்க வேண்டிய வேளையில்
சாதி என்னும் சாக்கடையில் மிதக்கிறாய்
மதம் கொண்ட யானை போல
மதம் என்னும் மாயை கையில் எடுத்து
மனித நேயத்தை அழித்து மதி கெட்டவர்களாகவும்
மானம் கெட்டவர்களாகவும் திரிகின்றோம்
சாதி மதத்தினால் ஊமையான மனித இனமே
இதனை விட்டு வா
மீண்டும் பிறந்து வா மனிதனை வாழ
சாதி சண்டாளர்களுக்கு சவுக்கடி கொடுத்து விட்டு வா
மத வெறியர்களை மதயானை போல் மிதித்து வா
அன்பு எனும் புது யுகம் படைபோம்வா மனித நேயம் காக்க வா வளர்க்க வா
மனிதனை வாழ்வோம்

எழுதியவர் : ஜான் பீட்டர் .பொ (5-Jan-15, 10:56 am)
பார்வை : 47

மேலே