மேகமே என் மேகமே

..."" மேகமே என் மேகமே ""...

ஏழையின் வீட்டின்
ஓட்டை கூரையின்
ஒருநிமிடத்து நிழல்
வானத்தின் நீர்ப்பந்தல்
மிதந்திடும் அருவி
கண்ணுக்கு தெரியும்
மகிழ்ச்சியின் தேவதை !!!

நினைக்கும் உருவம்
நொடியினில் மாறும்
செல்ல குழந்தைகளின்
கும்மாள கூட்டாளி
உன்னில் ஒளிந்திருக்கும்
எவ்வளவு வலிமைகள்
உந்தன் உரசலிலான
இடியும் மின்னலும் !!!

வெண்மையாக வந்தால்
மென்மையாக இருக்கும்
கருமையாக வந்தால்
நிலங்கள் செழிக்கும்
அந்த நிலவின் நண்பன்
சிறு நிழல்தரும் அன்பன் !!!

சூரிய வெப்பத்தை உன்
தோள்மீது சுமந்தே
வேகத்தை தடுக்கிறாய்
இயற்கை அளித்திட்ட
உயர்வான உன்னை
எந்நாளும் மறவேன் ,,,

நீரைமட்டுமா கவிதை வயல்
படைப்பாளிகள் படைத்திட
கவிதையும் சுமந்துவந்தாய் !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (5-Jan-15, 10:40 am)
Tanglish : megame en megame
பார்வை : 63

மேலே