தேர்தலும் குடிமகனும்

அந்நியன் பட பாணியில் படிக்கவும்.
----------------------------------------------------

டிங் டாங் - ஒரு தொடர் குடிமனைத் தொகுதியில் (அபர்ட்மெண்ட்) ஒரு மாடியில் உள்ள ஒரு வீட்டில இருக்கிற ஒருத்தர் வாக்களிக்காவிட்டால் தப்பா?

குடிமகன் - இல்லை. அதில என்ன தப்பு.... ஒரு வாக்கால என்ன நடந்திடப் போகுது?

டிங் டாங் - அந்த வீட்டில மூன்று பேர் இருந்து அவர்கள் மூவருமே வாக்களிக்காவிட்டால்...

குடிமகன் - அதொன்றும் பெரிய தப்பில்லை.

டிங் டாங் - ஒரு மாடியில் உள்ள மூன்று பேர் கொண்ட பத்து வீடு வாக்களிக்காவிட்டால்...

குடிமகன் - கொஞ்சம் தப்புத் தான்.

டிங் டாங் -பத்து மாடியில் உள்ள மூன்று பேர் கொண்ட பத்து வீடு வாக்களிக்காவிட்டால்..

குடிமகன் - தப்பு மாதிரித்தான் இருக்குது

டிங் டாங் -பத்து மாடி கொண்ட பத்து தொடர் குடிமனை தொகுதியில் உள்ள மூன்று பேர் கொண்ட பத்து வீடு வாக்களிக்காவிட்டால்..

குடிமகன் - தப்புதான்.

டிங் டாங் - பத்து இடத்தில இருக்கின்ற பத்து மாடி கொண்ட பத்து தொடர் குடிமனை தொகுதியில் உள்ள மூன்று பேர் கொண்ட பத்து வீடு வாக்களிக்காவிட்டால்..


குடிமகன் - பெரிய தப்புதான்.

டிங் டாங் - வெங்காயங்களா.... நீங்க நாகரீகம் என்ற பெயரில pizza hut லயே மூன்று மணிநேரமா உக்கார்ந்து இருந்து இடத்தையே நாறடித்து விட்டு சாப்பிடுற, மூன்று நாளுக்கு முன்னாடியே பண்ணின pizza ல வேணும்னா small ,medium, large, என்று இருக்கலாம்.
தப்பில எல்லாமே large தான். extra large. புரிஞ்ச்சு கொள்ளுங்கள். இனியாவது வாக்களிக்காமல் இருக்காமல் உங்க கடைமையை செய்யுங்கள்

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (5-Jan-15, 9:52 pm)
பார்வை : 378

மேலே