தமிழின் விளையாட்டு

தமிழய்யா ஒருவர் பழக்கடைக்கு போனார் அங்கு விதவிதமான பழங்கள் இருந்தன அங்கு நடந்த உரையாடலின் நகைசுவை

கடைகாரர் :அய்யா என்ன பழம் வேண்டும் ?

தமிழய்யா :இங்கிருக்கும் பழங்கள் விலை எவ்வளவு ?

கடைக்காரர் ; (கிலோவில்) ஆப்பிள் 100,மாதுளை 80 ஆரஞ்ச் 50 திராட்சை 50 கொய்யா பழம் 20 வாழைபழம் 30...
(இடைமறித்த அய்யா )
போதும்பா எனக்கு கொய்யா பழம் 2கிலோ தா என்றார் .அதற்கான பணத்தையும் செலுத்திவிட்டார் .

கடைகாரர் ; பழத்தை எடுத்து தட்டில் போடுங்கள் என்றார்

உடனே அய்யா திராட்சையை எடுத்து தட்டில் வைத்தார்

கடைகாரர் என்னங்க கொய்யா பழத்திற்கு பணம் கொடுத்து விட்டு திராட்சையை தட்டில் போடுறிங்கனாறு

நான் சரியான பழத்தை தானே போடுகிறேன் .என்றார் அய்யா

(கடைக்காரர் உடனே கடுப்பாகி )
கொய்யாவை காட்டி இது அப்ப என்னதுனுனாறு?!!

அய்யா உடனே அது கொய்த பழமய்யா
கொப்புடன் இருப்பது தானே கொய்யாத பழமென்றார்

கடைகாரருக்கு ஒன்றும் விளங்க வில்லை ?

40ரூபாய்க்கு 2கிலோ திராட்சையை எடுத்து கொண்டு புறப்படலானார் .

கடைக்காரர் ;அய்யா இன்னும் 60ரூபாய் தரனும் .

அய்யா ;கொய்யா பழம் 20 தானே சொன்னீர் 2கிலோ 40 சரிதான் எனச் சொல்லி கிளம்பிவிட்டார் .

இப்போது கடைகாரருக்கு கொய்யாவை கொய்தபழமென சொல்வதா என்ன சொல்வதென்ற குழப்பத்தில் ....!!!

எழுதியவர் : கனகரத்தினம் (6-Jan-15, 5:28 am)
பார்வை : 312

மேலே