நிலவை பிடித்து

கிணற்றில் தெரிந்தது
நிலவு..
எடுக்கத்தான் முடியவில்லை!

எடுக்க முடியும்
என்று
நம்பியது கூட
குற்றமில்லை..!

எப்படி என்று
முடிவெடுத்ததுதான் தவறு..!

புகைப் படமாய்
எடுத்து விட்டு
புன்சிரிப்புடன்
போகிறான் ஒருவன்!

எழுதியவர் : கருணா (7-Jan-15, 5:51 pm)
Tanglish : nilavai pitithu
பார்வை : 121

மேலே