நாளைய தமிழும், தமிழரும் - பொங்கல் கவிதைப்போட்டி 2015
கல்வெட்டில் எழுதி காதல் வளர்த்த காலம் கடந்து
பனைஒலையில் பாதம் பதித்து
பட்டாடையில் பரவி சங்கம் வைத்து வளர்ந்த "சங்கத்தமிழே"
கனம் கனம் கறைகிறாய் கண்ணில் இருந்து
விதி என்று சொல்லி உன்னை பிரியமாட்டேன்
சதி என்று சொல்லி உன்னை விடவும்மாட்டேன்
நீ கொடுத்த இரத்தத்தில் சக்தி ஓன்று உள்ளது -சற்று பொறு
அயல் மொழி மயக்கத்தில் உறங்கும் என் சமுதாயத்தில் எழுப்புகிறேன்
வள்ளுவர், கம்பன் , பாரதி, உண்டு
மிச்சம் வைத்த எச்சில் உண்டவர்கள் நாங்கள் - உன்னை
இயல், இசை, நாடகத்தில் நிற்கவைத்து
அடி, சீர், தொடை,இலக்கிய நயம் ரசித்தவர்கள் நாங்கள்
கைவிரல் பிடித்து கண்கலங்கி கற்றேன்
காதலி உன்னை கைவிட மாட்டேன் - உன்னை
உன்னை விழுத்த நினைபவனை
விழுத்த நினைக்கவில்லை நாங்கள்
அவனை விட - நாளை ஒரு படி
உயர்த்த நினைக்கிறோம "செம்மொழி" பெண்ணே !
--------------------------------------------------------------------------
இந்த கவிதை என்னால் படைக்கப்பட்டது என்று உறுதி அளிக்கிறேன்
சி. வேலு
வயது -25
சிவாஜி நகர்
போளூர் வட்டம், திருவண்ணாமலை
கைப்பேசி - 7418202364