கல்லறையான குளக்கரை
நீண்ட நாட்களுக்கு முன்
நீர் நிறைந்த குளம்
இன்று குறைந்து கரைந்து
நீச்சல் குளம் ஆனது
குளத்தின் குரல்வளை மீதேறி நின்றது
கோடி விலை போகும் குடியிருப்புகள்
குளக்கரையோர மரங்களெல்லாம்
குரோட்டன்ஸாய் மாறின
ஒவ்வொருவீட்டின் வாசலிலும்
குடியிருப்பின் முன்னே
உயிர் உள்ள புற்களை மேய்கின்றன
உயிரற்ற மான்கள் – அதை
கடந்து செல்லும் போதெல்லாம்
என் மேல் விழுகின்றன
குளம் எறியும் கற்கள்
எத்துனை தான் அழகிய
வேலைப்பாடுடன் இருந்தாலும்
இயற்கையை புதைத்த
கல்லறைகளாய்த்தான்
தெரிகின்றன அடுக்குமாடி குடியிருப்புகள்.
===========================================================
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி - #32 வி.எம் கோவில் தெரு, தூத்துக்குடி-628001
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +919841491911