கருப்புசாயம்
இயற்கை
மயக்கம் கொண்ட வான பூவையின் அங்கங்களை
மறைக்கின்ற முகில் சரிகைகள்
முத்தமிட துடிக்கும் முன்னுரைக் கடிதங்கள்
வெட்கித்தலைகுனியும் வெண்ணிற மேகங்கள் !
விண்ணில் மதியழகிக்கு பூப்புனித நீராட்டுவிழ
அழைப்பிதழ் விடுக்கிறது மேகம்!
வானதேவியின் நரம்புகள் விம்மிபுடைகின்றது
மின்னல் ஒளிகள் வானில்
பட்டாசு வெடிக்கின்றன பாறைகள்!
ஒத்த ரூபாய் காசு கேட்டு ஒப்பரிவைக்கின்றன மேகங்கள்
குமுறல் சப்தம் மேலே!
கபடியாடி கபடியாடி கலைத்துப்போனது காற்று
திங்கள் மீனை பிடிப்பதற்கு எத்தனையோ தூண்டில்கள்
ஏற்றிவிடும் ஏணி போல எத்தனையோ விருட்சங்கள்
கட்டிக்கிடக்கும் பசுக்கள் போல நிற்கின்ற மேகங்கள்!
இயற்கையினை ஆணாக பாவிப்பதா?, இல்லை பெண்ணாக பாவிப்பதா?
ஒற்றை மார்பு கொண்ட மாது வானம்
கருப்புச்சாயம் பூசிய கலவை இருட்டு
ஓசையின்றி உழவு செய்யும் ஏர்மாட்டுக்கூட்டம்
உதட்டுச்சயமிடும் ஒருநிமிட வானவில்
தேகத்தில் வெடித்ததெழுந்த தங்ககொப்பலங்கள் விண்மீன்கள்
ஓட்டுக்கேட்டு உலாவரும் ஊர்சுற்றிப்பறவைகள் மேகங்கள்
ஊடலில் உரைந்துபோன கதுவாளிகுஞ்சுகள்
ஓட்டபந்தயத்தில் ஒளிரும் திங்கள்!
எத்தனை அதிசயம் வானில் ?.............................
-தமிழ்மாறன்