சுகுமாறன் கவிஞன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுகுமாறன் கவிஞன் |
இடம் | : ம.கல்லுப்பட்டி |
பிறந்த தேதி | : 08-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 6 |
பொறியாளன்
முயலின் தன்னம்பிக்கை
ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது. அதற்கு காரணம்.
ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான். இன்னொரு பக்கம் நாய்.... மறுபக்கம் புலி..
என எந்தப்பக்கம் திரும்பினாலும் முயலுக்கு எதிரிகள்.
சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது.
இறுதியாக..
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல்.
அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின. (...)
மணலாலே வீடெடுத்து மரவள்ளி கிழங்கெடுத்து
....தினைமாவுத் தேனெடுத்து திமிர்கொண்ட ஓடையோரம்
தமிழ்சார்ந்த சொல்லெடுத்து தாளத்தின் வேரெடுத்து
....சுரமோடு நீபாட சுருதிக்குள் நானோட ...
கண்ணாளால் விழிபார்க்க காளைமனம்உள்வேர்க்க
....புண்ணான நெஞ்சத்தை புனர்செய்யும் உன்பார்வை
உன்னாலே காதல்எழ பேரச்சம் என்னுள்விழ
....தினம்நூறு கவிதோன்றும் திரவியமும் நீயானால் ...
பனிமூளும் தேசத்தில் பார்வைகளின் படுசூட்டில்
....பகலவனின் ஒளிக்கீடாய் பாயாதோ வெப்பங்கள்
காற்றுபுகா தேசத்தில் காதல்மட்டும் சுமந்துசென்று
....காலனையே காவல்வைத்து காவியங்கள் படைத்திடுவோம்...
மேகத்தின் மீதமர்ந்து மின்னல்களி
ஓடாமல் ஓடிடும் என் கால்கள்
நகராது அவள் பார்வையினால்;
கவலையில்லை யார்கண்டாலும் எனது பிழையை,
அவள் பார்த்தாலே மடிந்து போவேன் கூச்சத்தினால்..!!
-பார்வை
பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அவள் பார்க்க கிடையாய் கிடந்தேன்;
நாள் முழுதும் கூட ஒளிந்து நிற்ப்பேன் அவள்;
என்னை தேடும் ஒரு நொடிக்காக ..!!
-தேடல்
எவ்வளவு நேரம் காத்திருந்தாளோ,
எனை கண்டதும் காணாமல் போக;
ஒரு யானை வந்தாலும் எதிர்க்கொள்வேனே
அவள் வெட்கம் எனை சிறையடைத்ததே
-வெட்கம்
பரட்டையாய் திரிந்த நான்
கண்ணாடியை குத்தகைக்கு எடுத்தேன்..!!
தனிமையில் நேரம் கழிப்பேன் நான்
அவள் எனை கடந்ததும் வானில் பறப்பேன்;
ஒருமுறை அவள் திரும்பினால
ஆற்றல் இல்லாமல்
*** அதிக எதிர்பார்ப்பில்
மாற்றும் 'வாசல்திசை'
*** வளம்தருமா வாலிபனே?
எண்ணிச் செய்யாமல்
*** ஏமாந்து கோட்டைவிட்டு
'எண்ணை'மட்டும் மாற்றினால்
*** எல்லாம் நடந்திடுமா?
தொடர்ந்து போராடும்
*** துணிச்சல் இல்லாமல்
அடைந்த 'பேர்மாற்றம்'
*** ஆசைநிறை வேற்றுமா?
சாதிக்க வேண்டுமெனில்
*** தைரியந்தான் வேண்டுமடா!
'மோதிரக்கல்' மாற்றுகின்ற
*** முட்டாளே, ஒன்றுகேள்!
தாயத்து, மாந்தரீகத்
*** தகடுகள், அருள்வாக்கு
மாயத்தில் ஒன்றும்
*** மாங்காய் பழுக்காது!
வெளிமாற்றம் எதனாலும்
*** வெற்றிவந்து சேராது!
எளிதாகும் எல்லாமே
*** உள்ளே உனைமாற்று!
சாதியெனும் சாக்கடையில்
நீதி கொன்ற பேய்களே கேளுங்கள் !
பாதி பாதி பிணங்களாய்
மாண்டுவரும் மாந்தரே கேளுங்கள் !
பேயினும் கொடிய பேய் நீங்களே
தன்னை தானே அழித்துக்கொண்டீர் தாங்களே !
மதமெனும் மாத்திரையில் இறந்துவரும் சவங்களே கேளுங்கள் !
கரம் கொண்டு சிரம் கொய்ய காரணம் நீங்களே !
சாதி மத பேதமெனும் சந்தர்ப்ப சூழல்கள் !
மனிதரை அழித்திடும் கற்கால மோதல்கள் !
உயர்சாதி தாழ்சாதி என்றொன்று உண்டோ !
மனிதரை மனிதரே வதைத்தாலும் நன்றோ !
உயரிய எண்ணத்தை விதைப்பதுவே முறை !
சாதி மத கோட்பாடு மாந்தருக்கு சிறை !
மனிதஇனம் வேரூன்ற நீ மாறவேண்டும்!
மேற்சொன்ன சகதிகளை தூர்வாரவேண்டும
சாதியெனும் சாக்கடையில்
நீதி கொன்ற பேய்களே கேளுங்கள் !
பாதி பாதி பிணங்களாய்
மாண்டுவரும் மாந்தரே கேளுங்கள் !
பேயினும் கொடிய பேய் நீங்களே
தன்னை தானே அழித்துக்கொண்டீர் தாங்களே !
மதமெனும் மாத்திரையில் இறந்துவரும் சவங்களே கேளுங்கள் !
கரம் கொண்டு சிரம் கொய்ய காரணம் நீங்களே !
சாதி மத பேதமெனும் சந்தர்ப்ப சூழல்கள் !
மனிதரை அழித்திடும் கற்கால மோதல்கள் !
உயர்சாதி தாழ்சாதி என்றொன்று உண்டோ !
மனிதரை மனிதரே வதைத்தாலும் நன்றோ !
உயரிய எண்ணத்தை விதைப்பதுவே முறை !
சாதி மத கோட்பாடு மாந்தருக்கு சிறை !
மனிதஇனம் வேரூன்ற நீ மாறவேண்டும்!
மேற்சொன்ன சகதிகளை தூர்வாரவேண்டும
இயற்கை
மயக்கம் கொண்ட வான பூவையின் அங்கங்களை
மறைக்கின்ற முகில் சரிகைகள்
முத்தமிட துடிக்கும் முன்னுரைக் கடிதங்கள்
வெட்கித்தலைகுனியும் வெண்ணிற மேகங்கள் !
விண்ணில் மதியழகிக்கு பூப்புனித நீராட்டுவிழ
அழைப்பிதழ் விடுக்கிறது மேகம்!
வானதேவியின் நரம்புகள் விம்மிபுடைகின்றது
மின்னல் ஒளிகள் வானில்
பட்டாசு வெடிக்கின்றன பாறைகள்!
ஒத்த ரூபாய் காசு கேட்டு ஒப்பரிவைக்கின்றன மேகங்கள்
குமுறல் சப்தம் மேலே!
கபடியாடி கபடியாடி கலைத்துப்போனது காற்று
திங்கள் மீனை பிடிப்பதற்கு எத்தனையோ தூண்டில்கள்
ஏற்றிவிடும் ஏணி போல எத்தனையோ விருட்சங்கள்
கட்டிக்கிடக்கும் பசுக்கள் போல நிற்கின்ற மேகங்கள்!
இய
அந்த வண்ணானுக்கு சொல்லி அனுப்பு
வந்து வெள்ளைத்துணி கட்டட்டும் !
அந்த அம்பட்டனுக்கு சொல்லி அனுப்பு
வந்து மங்களமேளம் முழங்கட்டும் !
அந்த பறையனுக்கு சொல்லி அனுப்பு
வந்து குருத்தோலை பின்னட்டும் !
ஏம்ப்பா ! அந்த பறையன கூப்புடு ஊருக்கு பறையடிக்க;
ஏம்ப்பா ! அந்த அம்ப்பட்டன கூப்புடு தாடிய வயிச்செடுக்க;
ஏம்ப்பா ! அந்த வண்ணான கூப்புடு வாய்க்காரிசி புடிக்க;
இந்த ஏளனப் பேச்சுகள் கிராமப் புறங்களில்
அங்கெங்கெனாதப்படி இன்றும் ஒலித்தப்படி….!
இப்படியாக நல்லதிலும் கெட்டதிலும்
உங்களோடு ஒத்தாசை புரிபவர்களுக்கு
நீங்கள் அளிக்கும் ஆணவப் பட்டம்
அவன் உங்கள் அடிமை என்கின்ற
இராணுவச் சட்டம் !
டேய