காதலின் விதை
ஓடாமல் ஓடிடும் என் கால்கள்
நகராது அவள் பார்வையினால்;
கவலையில்லை யார்கண்டாலும் எனது பிழையை,
அவள் பார்த்தாலே மடிந்து போவேன் கூச்சத்தினால்..!!
-பார்வை
பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அவள் பார்க்க கிடையாய் கிடந்தேன்;
நாள் முழுதும் கூட ஒளிந்து நிற்ப்பேன் அவள்;
என்னை தேடும் ஒரு நொடிக்காக ..!!
-தேடல்
எவ்வளவு நேரம் காத்திருந்தாளோ,
எனை கண்டதும் காணாமல் போக;
ஒரு யானை வந்தாலும் எதிர்க்கொள்வேனே
அவள் வெட்கம் எனை சிறையடைத்ததே
-வெட்கம்
பரட்டையாய் திரிந்த நான்
கண்ணாடியை குத்தகைக்கு எடுத்தேன்..!!
தனிமையில் நேரம் கழிப்பேன் நான்
அவள் எனை கடந்ததும் வானில் பறப்பேன்;
ஒருமுறை அவள் திரும்பினாலே போதும்
பைத்தியக்காரனை போல் பிதற்றி தொலைவேன்
மிகுந்த தலை குணிவை அளித்தாள் எனக்கு
ஏனெனில் அவள் ‘குள்ளம்’ என்னைவிட ;
பூக்களை வெறுப்பேன் நான், ரசித்து
தொலைத்து விட்டேன் அவள் சூடிய போது..!!
அவளின் குரலை கூட கேட்டதில்லை ஆனால்,
கனவில் என் குழந்தையை சுமக்கிறாள் அவள்;
கவிதை என்றால் என்னவென்றே தெரியாது
என்னையும் இப்படி புலம்ப விட்டாள் அவள்..!!
மன்னித்து விடுங்கள் நண்பர்களே…
-இதுகவிதைஅல்ல-எனதுபுலம்பல்….!!!!