கவிஞன் - உதயா

வாழ்வை
வடித்து
வாழ
வழிகாட்டும்
ஆசானா ?

கல்லுக்கும்
காற்றுக்கும்
கடலுக்கும்
உயிர்கொடுக்கும்
கடவுளா ?

பூவுக்கும்
விண்ணுக்கு
மண்ணுக்கும்
உணர்வளிக்கும்
சித்தனா ?

வானில்
கோட்டை கட்டும்
பொறியாளனா ?

வானவில்லை
வேட்டை வில்லாக்கும்
தச்சனா ?

உணர்வுகளை
உரைக்க
உலகெங்கும்
உறுமி கூறும்
உரிமைப் பித்தனா ?

விடையின்றி
விழி துயிலின்றி
அலைந்தனெனக்கு
மனம்
அறிந்து கூறியது

கனவை
நினைவாக
படைக்கும்
கவிஞன்னென்று............

எழுதியவர் : udayakumar (9-Jan-15, 7:21 pm)
பார்வை : 120

மேலே