சொர்க்கமா சுடு காடா என் மாமாவே
குயிலின் குரல்
குயிலின் குரல்
காதில் கேட்கலையோ
என் மாமாவே உன்
காதில் கேட்கலையோ..?
கிளிப்பேச்சு
கிளிப்பேச்சு
உன்னை மயக்கலையோ
என் மாமாவே உன்னை
மயக்கலையோ...?
என் மூச்சுக் காற்று
மூச்சுக் காற்று சூடு
ஏத்தலயோ மாமாவே
சூடு ஏத்தலையோ...?
பக்கம் வந்து
பக்கம் வந்து
நான் வெட்கம்
காட்டையிலே
ஒண்ணும் தோணலையோ
என் மாமாவே ஒண்ணும்
தோணலையோ...?
கொலுசு சத்தம்
கொலுசு சத்தம்
உன்னை இழுக்கலையா
என் மாமாவே உன்னை
இழுக்கலையா...?
தொட்டுத் தொட்டு
பேச வந்தால் விட்டுக்
கொடுத்து விடுவாயா
மாமாவே உன்னை விட்டு
கொடுத்துடுவாயா...?
என் விழி பேச்சுக்கு
மொழி தேடலையா
மாமாவே நீ மொழி
தேடைலையா....?
என் கரு விழி
வெட்டி வெட்டி
உன்னை நோக்குவதை
நீயும் நோக்கலையோ
என் மாமாவே நீயும்
நோக்கலையோ.....?
என் செவ்விதழ் கொண்டு
முத்தம் பதிக்கட்டுமா
மாமாவே சில முத்தம்
பதிக்கட்டுமா...?
என் சுண்டு விரல்
உன்னை தீண்டையிலே
மாமாவே உனக்கும்
தீண்டும் சுகம் தோணலையோ
மாமாவே தோணலையோ......?
நான் குண்டு மல்லிகை
சூடி வந்து நிட்கையிலே
மாமாவே மெத்தை
தேடுவாயோ மாமாவே
நீயும் மெத்தை தேடுவாயோ......?
பத்து மாசத்திலே நான்
பெற்று எடுப்பேன் முத்துப்
பிள்ளை உன் முகம் போலே
மாமாவேஅது உன்
முகம் போலே.....
ஊரைக் கூட்டி பெயர்
சூட்ட நல்ல நாள்
பார்க்கவேண்டும் அன்
நாளிலே ஒரு நல்ல நாள்
பார்க்க வேண்டும்
மாமாவே நீங்க தான்
மாமாவே.....
நீ தொட்டுப்புட்டா
இத்தனையும் சொர்க்கம்
எனக்கு மாமாவே....
நீ விட்டுப் புட்டா எப்போதும்
சோகந்தான் மாமாவே
சொந்த இடம் சுடுகாடு மாாவே
இனி என் சொந்த நாடு
அவைதான் மாமாவே......