எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முயலின் தன்னம்பிக்கை ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள...

முயலின் தன்னம்பிக்கை

ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது. அதற்கு காரணம்.

ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான். இன்னொரு பக்கம் நாய்.... மறுபக்கம் புலி..
என எந்தப்பக்கம் திரும்பினாலும் முயலுக்கு எதிரிகள்.

சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது.

இறுதியாக..
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல்.
அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின.
முயல் சிந்தித்தது...
அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா??
என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்ந்ததாம்.....
“தற்கொலை செய்து கொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்?
வாழ்ந்துதான் பாரேன்..”

பதிவு : தன்சிகா
நாள் : 17-Jan-15, 8:59 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே