எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அலாவுதீன் அற்புத விளக்கு ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர்,...

அலாவுதீன் அற்புத விளக்கு

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், விற்பனை பிரதிநிதி (sales representative) – மூவரும் மதிய உணவு இடைவேளையில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.
மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. அதை பார்த்ததும் மூன்று பேரும் அந்த விளக்கைத் தேய்க்கிறார்கள் அதில் இருந்து ஒரு பூதம் வெளிப்பட்டு,

"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான் கேட்க வேண்டும்" என்கிறது.

மூவருக்கும் ஆச்சரியம் கலந்த சந்தோஷம்!
உடனே கேஷியர் முந்திக்கொண்டு,
"நான் அமெரிக்காவுக்கு போக வேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார்.
பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்து விடுகிறார்.

அடுத்து விற்பனை பிரதிநிதி…
"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார்.
அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர்,
"நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம்.
அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,
"ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"

பதிவு : தன்சிகா
நாள் : 17-Jan-15, 9:03 pm

மேலே