S M Ganesh - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : S M Ganesh |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 26-Dec-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 12 |
I'm Human Being
அவசரமாய் தேவை
அழகான கவிதை...
மற்றவரிடம் இருந்து
இரவல் கேட்க பின்வாங்கியது
என் மனம்...
"நீ சூப்பரா கவிதை எழுதுறடா"
என்று உன் பாராட்டுக்களை
வாங்கியபிறகு...
யாரும் எழுதாத காதல் கவிதையை
புதிதாய் புதுமையாய்
எழுத வேண்டும்..
மின்சாரப் பாய்ச்சலில்
ஒளியைத் திரட்டி
இருக்கின்ற தமிழ் எழுத்துக்களில்
வார்த்தைகளைத் தேட ஆரம்பித்தது
என் பேனா...
உனதிரு கண்களை-
அவை என்மீது காட்டும் காதல் பார்வையை
பார்த்த பின்
தேடல் சட்டென முடிந்தது...
கவிதை கண்ணெதிரில்
உன் வடிவாய்...
அவசரமாய் தேவை
அழகான கவிதை...
மற்றவரிடம் இருந்து
இரவல் கேட்க பின்வாங்கியது
என் மனம்...
"நீ சூப்பரா கவிதை எழுதுறடா"
என்று உன் பாராட்டுக்களை
வாங்கியபிறகு...
யாரும் எழுதாத காதல் கவிதையை
புதிதாய் புதுமையாய்
எழுத வேண்டும்..
மின்சாரப் பாய்ச்சலில்
ஒளியைத் திரட்டி
இருக்கின்ற தமிழ் எழுத்துக்களில்
வார்த்தைகளைத் தேட ஆரம்பித்தது
என் பேனா...
உனதிரு கண்களை-
அவை என்மீது காட்டும் காதல் பார்வையை
பார்த்த பின்
தேடல் சட்டென முடிந்தது...
கவிதை கண்ணெதிரில்
உன் வடிவாய்...
தமிழ்!
அன்று இது..
பிள்ளை மொழி பேச
தமிழா நீ..
திக்கித் திணறி கற்ற மொழி.
.
எழுத்துக் கலை கற்க
நீ எரிச்சல் பட்டு
உன்னில் தேர்ந்த மொழி
.
நின் சிந்தனை திரிக்கு
எண்ணெய் ஊற்றி தீ மூட்டி
வனப்பாய் ஏரிய
வழிகாட்டி நின்ற மொழி
.
பாஷை தெரியா பட்டணம் தன்னில்
பரிதவித்து நின்ற பாவிமகன் உனக்கு
பக்கத்தில் வந்து நின்று
பந்தம் வளர்த்த மொழி
.
கவிஞன் என்ற பித்தனவன்
கவியந்தான் பல படைக்க
அவன் கைக்கத்தி முனையில்
கருமையாய் உதிர்ந்த மொழி
.
இன்று
தலைப்பில் கூட
தமிழ் காண விரும்பா
தன்மானமில்லா மக்களின் மொழி
.
கட்டபொம்மன் கர்ஜனையில்
கம்பீரமாய் நின்ற மொழி-இன்று
நாகரீக எட்டப்ப
( இறந்த காதலியின் கல்லறையைத் தழுவிக்கொண்டே காதலன் புலம்பியழும் வலிகளே இக்கவிதையில்...)
என்னவளே!
உன்னை உலக அதிசயம்
என்று சொல்லி ஜடப்பொருளாய்
ஆக்கிவிட முடியாது
நீ
உயிர்களின் அதிசயம்
பூவுக்குள் உயிர் பெற்ற
பிரபஞ்சத்தின் ரகசியம்!
உன் ஒருத்திக்காக மட்டும்தான்
காதல் தராசில் நான்
என்னையே நிறுத்தி
எடையிட்டு கொடுத்தேன்!
மனச்சிறையை உடைத்து
மத்தாப்பு கொளுத்தினாய்
மகிழ்ந்துவிட்டேன்
காதல் தீபாவளியை என்
கைகளில் தந்துவிட்டாயென்று
ஆனால்
வெடித்த பிறகுதான்
தெரிந்தது அதில்
சரவெடியாய் இருந்தது உன்
உயிரே என்று...
ஒரு மாறுதலுக்காக
உன்னை கண்ணீர் என்று
வர்ணித்தேன்
அதுதான் இன்
எதிர்பாராத நேரத்தில் வரும்
உன் குறுந்தகவலில்
தடுக்கி விழுவது நான் மட்டுமல்ல
என் அலைபேசியும்தான்...
உறக்கம் கெடுத்தாய்
எனக்கென புது உலகம் படைத்தாய்
கலவை இல்லாத அன்பு காட்டி
கவலை மறக்கக் கற்றுக் கொடுத்தாய்
எனக்காய் பிறந்தாய்
கனவிலே எனைக் களவு செய்தாய்
நிலவை ரசிக்கச் சொல்லிக் கொடுத்து
நிதமும் கவிதை எழுத வைத்தாய்
எப்போதும் உனை
நீங்காது இருப்பேன்
எனக்கென்று கிடைத்த
சொக்கத்தங்கம் நீதானே...
இப்போது நான்
அடித்துச் சொல்வேன்
அக்மார்க் முத்திரையிட்ட
காதல் பைத்தியம் ஆனேனே...
எதிர்பாராத நேரத்தில் வரும்
உன் குறுந்தகவலில்
தடுக்கி விழுவது நான் மட்டுமல்ல
என் அலைபேசியும்தான்...
கடுந்தவம் புரிந்தேன் கடவுள் தோன்றினான்
சாகாவரம் கேட்டேன் முடியாது என்றான்
என்னவளைப் பிரியாத வரம் வேண்டும்
சொன்னவுடன் கொடுத்தான்.
கடவுள் பய புள்ளைக்குத் தெரியாது
உன்னைச் சேர்ந்திருக்கும் வரை
எனக்கு மரணம் கிடையாது
கவிதை எழுத எனக்கும் ஆசை வந்தது
கண்மணியே உன் மீது காதல் வந்தது
ஞாலங் காக்க பிறந்தவ னெனக்குற்ற
துணையா யிருந்திடல் வேண்டும்
மானங் காக்கு குணத்தவ ளாகியென்-மாட்சி
குறையா திருத்திடல் வேண்டும்
சாலச் சிறந்த பேறிரு பெற்றுஇந்த
வானம் புகழ வாழ்ந்திடல் வேண்டும்
காலங் கடந்து சென்ற போதும்நம்-காட்சி
நீங்கா திருந்திடல் வேண்டும்
நண்பர்கள் (5)

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

சுகுமாறன் கவிஞன்
ம.கல்லுப்பட்டி

கார்த்திகா
தமிழ்நாடு

நா கூர் கவி
தமிழ் நாடு
