ராதா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராதா
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  04-Feb-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Aug-2013
பார்த்தவர்கள்:  185
புள்ளி:  15

என் படைப்புகள்
ராதா செய்திகள்
ராதா - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.

கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.

போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.

மேலும்

இன்னும் 5 தினங்களில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நன்றி 15-Nov-2017 7:58 pm
போட்டிக்கான முடிவுகளை எப்போது அறிவிப்பீர்??? 13-Nov-2017 12:56 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்... 09-Oct-2017 12:59 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும் 08-Oct-2017 6:41 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Feb-2015 10:47 am

[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]

உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?

உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?

அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனைய

மேலும்

மீண்டும் கண்ணில் பட மனம் லயித்தேன் ... மின்னல் வரிகளிலே அசந்தேன் .. 06-Jul-2015 3:21 pm
மிக்க நன்றி அய்யா.... வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தாங்கள் வாசித்ததே இந்த கவிதையின் பாக்கியம்... 13-Apr-2015 1:36 pm
இன்றுதான் கண்டேன் ...வாசித்தேன் ..மகிழ்ந்தேன் ....பாராட்டுக்கள் .... 13-Apr-2015 11:36 am
நன்றி தோழமையே... வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றிகள் பல,... 28-Mar-2015 9:15 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jan-2015 6:45 pm

ஆதியிலே சாதிக்கு ஆதாம் ஏவாள்
------- அடிபணிந்து சென்றிருந்தால் இந்த நேரம்
பீதியிலே நாமெல்லாம் செத்துச் செத்து
------- பிணமேடாய் குவிந்திருப்போம்; மானுடத்தில்
பாதியிலே உயிர்ப்பெற்ற சாதி பேய்கள்
------- பாழ்படுத்தும் கொடுமைகளால் நம்மையெல்லாம்
வீதியிலே கத்தியோடு ஓட வைத்த
------- வெறித்தனங்கள் இனிமேலும் தொடரலாமா?

எத்தனையோ பிரிவினைகள் வளர்த்துக் கொண்டு
------- எதிரிகளாய் வாழ்வதிலே அர்த்தம் இல்லை
செத்தாலும் சவக்குழியில் சாதி பார்க்கும்
------- சாத்தானாய் நிற்பதிலே அர்த்தம் இல்லை
பெத்தவளை விடுதிக்கு அனுப்பிவிட்டு
------- பிரார்த்தனைகள் செய்வதிலே அர்த்தம் இல்லை
நித்தமொரு உதவி

மேலும்

ரசிப்பிற்கு மிக்க நன்றி நண்பரே... 18-Feb-2015 1:35 pm
சிறப்பு நண்பா , தங்களின் கவி நடையே தனி அழகுதான் , வாழ்த்துக்கள் 16-Feb-2015 10:52 pm
மிக்க நன்றி ஐயா... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... தங்களைப் போன்ற பெரியோர்களால் என் கவிதை வாசிக்கப் படுவதே என் பாக்கியமாக கருதுகிறேன்... எண்சீர் விருத்தம் தான் அய்யா.. 03-Feb-2015 12:41 pm
யுகபாரதி சிறப்பு விருதினைப பெறுவதற்கு இனிய வாழ்த்துகள். எண்சீர் விருத்தம் என்று நினைக்கிறேன். மிக அருமையான கருத்துகளுடனும், அருமையான புகைப்படத்துடனும் ஒன்றாம் தரமாக அமைந்த கவிதைக்கு என் இனிய பாராட்டுகள், ஜின்னா. 02-Feb-2015 7:36 pm
காதலாரா அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jan-2015 10:54 pm

நாளைய தமிழும் தமிழரும் - பொங்கல் போட்டி கவிதை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்னை , தந்தை எனும்
தமிழ் சொற்கள் தொலைந்துப் போகும்.

பேசும் வாக்கியமொன்றின்
இறுதியிலும் இல்லாமல் போகும் தமிழ் ...

பொருள் தேடலில் புலமை இழந்து
தமிழனின் பொருள் புதையும் ...

தியாகமில்லா தீர்வுகளில்
நாகரீகம் நகர்ந்து
ஆயுள் குறைவுகளே
அன்றாட வாழ்வின் தேடலாகும் ...


"ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
அடுத்த மாதம் மொழிபெயர்க்கபடுவது
உலகப்பொதுமறை" நூலென
உலகச்செய்திகளில் வாசிக்கப்படும் .

அரசு தேர்வுகளையும்
ஆங்கிலத்தில் மட்டுமே எழுத
அரசாணைகள் உத்தரவாகும் ...

தமி

மேலும்

வரவில் ...புரிதல் மிக்க கருத்தில் மகிழ்ச்சி நட்பே 22-Jan-2015 7:50 am
இவை நடக்க வாய்ப்புகள் அதிகம்...நடக்காமல் தடுக்க தமிழனுக்குப் பொறுப்புகளும் அதிகம்...ஒவ்வோர் பதினான்கு நாட்களுக்கும் ஓர் மொழி அழிந்து வருவதாக யுனஸ்கோ மதிப்பிட்டு மொழிந்துள்ளது.இந்த நூற்றாண்டின் இறுதியில் ஏறத்தாழ 7000 மொழிகள் இல்லாமல் போகக்கூடும்..அந்த வரிசையில் நம் மொழி வாராமல் தடுக்கும் மிகப்பெரிய கடமை நமக்குண்டு... சிறந்த கருத்து தோழரே வாழ்த்துக்கள்.... 21-Jan-2015 11:09 am
ஹ்ம்ம் ..மகிழ்ச்சி தங்கச்சி வரவில் 20-Jan-2015 3:47 pm
ம்.......இதுபோல் நடக்க நிறைய வாய்ப்பிருக்கிறது அண்ணா....அதன்பிறகு தமிழை கனவில் தான் நேசிக்க முடியும் அப்படி நம் உலகம்(மக்கள்) மாறிவிட்டது....! படைப்பு மிக மிக அருமை அண்ணா....அழுத்தமான வரிகள். 20-Jan-2015 11:02 am
ராதா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 11:55 pm

காற்றை மட்டும் கழற்றி
அலசலாய் வெளிச்சம் ஊற்றி
பாகுபாடு இல்லா தனியொரு
தரணி தந்தான் அன்றொருவன்..

ஆதியும் அந்தமுமாய் அவளும் அவனும்
ஜாதி இரண்டிற்குள் இழைந்தோடியது தன்பு ..
ஞானமில்லா நாளில் ஞாலமெங்கும் நட்பு

உணர்வு மலர்ந்து எல்லாமும் மாற
இருவர் மட்டும் நிலைமாறி பல்லாயிரமாக
உணவும் உணர்வும் கலக்கத்தெரியா கூட்டமதை
குவியமொன்றில் குவிக்க முனைந்தது சமயம்..

காலங்கள் கடந்தோட
சாவும் சாதமும் சந்தோசமும் விளங்க
பகுத்தறிவு பெற்று பழைய நிலைப்புகுந்து
மனிதம் வளர்க்க மனமது பதைபதைக்க

விஞ்ஞானம் கற்றும் வீணராய்
குவிக்க முனைந்த குவியம் உடைத்து
மெய்ஞானம் மறந்து ஜாதிக்குள்

மேலும்

ராதா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2014 10:06 pm

எம்பொருளே.!
*
எத்துனை மனிதர்கள்
நின் படைப்பில்.....!
கண் அகற்றி பார்க்க
வைக்கும் சிலர்...
கருத்தை விட்டு அகலாத சிலர்
சேற்றில் முளைத்த
செந்தாமரைகளாய் சிலர்..
நாற்றின் நடுவே களைகளாய் சிலர்
தன்னலமே தாரக மந்திரம் பலரில்
அந்நலம் பேணத் தெரியாத
பித்தர்களாய் சிலர்
அழிவை மட்டுமே தரநினைக்கும்
ஆக்கம் பலரில்
அதை ஆக்கமாய் மாற்ற நினைக்கும்
ஏக்கம் சிலரில்
*
எத்துணை மனிதர்கள்
நின் படைப்பில்.....!
*
காரணம் ஆய்ந்ததில்
கருத்து பிழைத்ததோ
இறைவா உன்னை....?
நவீன மனிதனோ அறிவியல் பெயரில்
பிழைக்கு புதுமொழி யிட்டான்
டி.என்.ஏ. என்று....!
*
தவறில்லை மனிதா
நீ என்ன செய்வாய் பாவம்?!
பி

மேலும்

நன்றி தோழரே விமர்சனங்களை வரவேற்கிறேன் .. 04-Dec-2014 9:05 pm
நன்றி தோழரே..வரவில் மகிழ்ச்சி.. 04-Dec-2014 9:03 pm
நன்றி தோழரே... 04-Dec-2014 8:53 pm
எண்ணம் எழில் !! 04-Dec-2014 6:31 am
ராதா - ராதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2014 11:33 pm

நரைகள் நிறையா
நாட்களுக்குள் நான் இருந்து
நாளும் காண ஆசை
.
சொந்தம் பந்தம்
விட்டுச் சென்று
சொர்கத்தில் ஓர்நாள்
குடியேற ஆசை
.
ஆளை மயக்கா
அழகுபெற ஆசை
.
சலனம் என்னைச்
சபிக்காதிருக்க ஆசை
.
மனம் வென்ற மனதுடன்
மனம் சேர்க்க ஆசை
.
தாய்மடியில் என்றும்
தகைத்திருக்க ஆசை
.
கவியில்லா ஒருலகை
காலன் காலடியில்
கடத்திச் சேர்க்க ஆசை
.
என்றும் திறமைக்கு பக்கத்தில்
வாய்ப்பினை வைத்து பார்க்க ஆசை
.
நள்ளிரவில் கரையோரம்
நான்மட்டும் தனித்திருந்து
அலைகடலோடு கொஞ்சம்
அளவளாவ ஆசை
.
நேற்றின் நிஜங்களுக்குள்
ஊடுருவிச் சென்று
நிழலாய் மாற்றிவர ஆசை
.
காரிர

மேலும்

ராதா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 11:52 pm

(இது நூற்றாண்டு கடந்த ஓர் கனவு பயணம்)
நாளைய பொழுதில் நானொரு
வேள்வி அமைக்க வேண்டும்
அதில் மந்திரம் ஓத - ஓர்
பண்டித ரேனும்வந் தமரவேண்டும்
வேதியர் வரின் அதை
கண்டிட இயந்திரம் கொள்ளா
மனித இருதயம் வேண்டும்

காலம் கடந்த இக்காட்சி கண்டு
மாரி யவள் மறவாமல் தன்
ஸ்பரிசம் கட்ட வேண்டும்- அதில்
நுரையீரல் நிரப்ப எங்கேனும்
பசுமை மாறா சிறு
புற்கூட்டம் வேண்டும்

புல்லது இருப்பின் அதை உண்ண
நாலொரு அக்றிணை நடமாட வேண்டும்
அதோடு அரிசி சோறுண்ண -சில
மானுடர் மனமெண்ண வேண்டும்
மானுடம் இருப்பின் அங்கே எம்
அன்னை தமிழ் நின்று
ஆருடம் சொல்ல வேண்டும்

தமிழது இருப்

மேலும்

கனவுகள் மெய்பட வாழ்த்துக்கள் .. வெற்றி பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் ... 05-Jan-2015 5:03 pm
வரவிலும் புரிதலிலும் வாழ்த்திலும் நன்றி தோழரே.. 14-Dec-2014 6:23 pm
கவித்துவம்!... படிக்கத்தூண்டும் வரிகள்! மென்மேலும் எண்ணங்கள் சிறந்தது உயர, நல்வாழ்த்துக்கள்... 14-Dec-2014 9:27 am
விமர்சித்தமைக்கு நன்றி.,நானும் இதை உணர்தேன்..குறை என கொள்ளவில்லை.. 11-Dec-2014 7:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (11)

Mani 8

Mani 8

சென்னை
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

Mani 8

Mani 8

சென்னை
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே