சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதைப்போட்டி 2015
காற்றை மட்டும் கழற்றி
அலசலாய் வெளிச்சம் ஊற்றி
பாகுபாடு இல்லா தனியொரு
தரணி தந்தான் அன்றொருவன்..
ஆதியும் அந்தமுமாய் அவளும் அவனும்
ஜாதி இரண்டிற்குள் இழைந்தோடியது தன்பு ..
ஞானமில்லா நாளில் ஞாலமெங்கும் நட்பு
உணர்வு மலர்ந்து எல்லாமும் மாற
இருவர் மட்டும் நிலைமாறி பல்லாயிரமாக
உணவும் உணர்வும் கலக்கத்தெரியா கூட்டமதை
குவியமொன்றில் குவிக்க முனைந்தது சமயம்..
காலங்கள் கடந்தோட
சாவும் சாதமும் சந்தோசமும் விளங்க
பகுத்தறிவு பெற்று பழைய நிலைப்புகுந்து
மனிதம் வளர்க்க மனமது பதைபதைக்க
விஞ்ஞானம் கற்றும் வீணராய்
குவிக்க முனைந்த குவியம் உடைத்து
மெய்ஞானம் மறந்து ஜாதிக்குள் வந்து
சிந்தை இழந்ததது இக்கூட்டம்
உண்மையில் ஒழித்துவிட முனைவது
ஜாதியோ மதமோ அன்று
சிறுவட்டம் அழித்து சமத்துவம் காணமுயலா
பகுத்தறிவில்லா மானுடம் மதையே..
- கி. ராதா
இது எனது சொந்த படைப்பு இதற்கு நானே முழு உரிமை ஏற்கிறேன்.
பெயர் : கி.ராதா
ஊர் : திருவில்லிபுத்தூர்