நாளைய தமிழும் தமிழரும் - பொங்கல் போட்டி கவிதை

நாளைய தமிழும் தமிழரும் - பொங்கல் போட்டி கவிதை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்னை , தந்தை எனும்
தமிழ் சொற்கள் தொலைந்துப் போகும்.

பேசும் வாக்கியமொன்றின்
இறுதியிலும் இல்லாமல் போகும் தமிழ் ...

பொருள் தேடலில் புலமை இழந்து
தமிழனின் பொருள் புதையும் ...

தியாகமில்லா தீர்வுகளில்
நாகரீகம் நகர்ந்து
ஆயுள் குறைவுகளே
அன்றாட வாழ்வின் தேடலாகும் ...


"ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
அடுத்த மாதம் மொழிபெயர்க்கபடுவது
உலகப்பொதுமறை" நூலென
உலகச்செய்திகளில் வாசிக்கப்படும் .

அரசு தேர்வுகளையும்
ஆங்கிலத்தில் மட்டுமே எழுத
அரசாணைகள் உத்தரவாகும் ...

தமிழரின் வீதிகளில்
தமிழுக்கு பயிற்சி வகுப்பு
வாரம் ஒருமுறை ...சிலருக்கு ...

தமிழகப் பள்ளிகளில்
தமிழ் பாடம் தவிர்க்கப்படும் ...

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (15-Jan-15, 10:54 pm)
பார்வை : 165

மேலே