பன்நிற மனிதர்கள்

எம்பொருளே.!
*
எத்துனை மனிதர்கள்
நின் படைப்பில்.....!
கண் அகற்றி பார்க்க
வைக்கும் சிலர்...
கருத்தை விட்டு அகலாத சிலர்
சேற்றில் முளைத்த
செந்தாமரைகளாய் சிலர்..
நாற்றின் நடுவே களைகளாய் சிலர்
தன்னலமே தாரக மந்திரம் பலரில்
அந்நலம் பேணத் தெரியாத
பித்தர்களாய் சிலர்
அழிவை மட்டுமே தரநினைக்கும்
ஆக்கம் பலரில்
அதை ஆக்கமாய் மாற்ற நினைக்கும்
ஏக்கம் சிலரில்
*
எத்துணை மனிதர்கள்
நின் படைப்பில்.....!
*
காரணம் ஆய்ந்ததில்
கருத்து பிழைத்ததோ
இறைவா உன்னை....?
நவீன மனிதனோ அறிவியல் பெயரில்
பிழைக்கு புதுமொழி யிட்டான்
டி.என்.ஏ. என்று....!
*
தவறில்லை மனிதா
நீ என்ன செய்வாய் பாவம்?!
பிழைபோடுதல் உன்
உடன் பிறப்பாயிற்றே
நீ என்ன செய்வாய் பாவம்
தவறொன்றுமில்லை........
*

எழுதியவர் : கி.ராதா (3-Dec-14, 10:06 pm)
பார்வை : 64

மேலே