இறைவனிடம் கேட்டேன்
![](https://eluthu.com/images/loading.gif)
கவிபேரரசு வைரமுத்து அவர்களின் கவிதையிலிருந்து
சற்று மாற்றி யோசித்தது
விலையில்லா அரசியல்
தொடர்ந்திடுமா! எனக் கேட்டேன்.
வற்றாத நதிகளில்
வெள்ளம் பாய்ந்திடுமா! எனக்கேட்டேன்.
மதுவில்லா நகரங்கள்
பூத்திடுமா! எனக் கேட்டேன்.
மனை நிலங்கள் குறைந்து
விளை நிலங்களாக வழி கேட்டேன்.
கொடையில்லா மழலையர்ப்பள்ளி
கிடைத்திடுமா! எனக் கேட்டேன்.
கடன் வாங்கா கைகள்
கலப்பையை பிடித்திடுமா! எனக்கேட்டேன்.
கணினி இளைஞர்கள்
களிப்புடன் வாழ வழி கேட்டேன்.
கொந்திய சாலைகள்
இல்லா சுகபயணம் கேட்டேன்.
பணமில்லா ஜனநாயகம்
பிறந்திடுமா! எனக்கேட்டேன்.
பாட்டாளி பரம ஏழை
பசியில்லாத நாள் வருமா! எனக் கேட்டேன்.
அடிதடி மறியல் செய்தி
அச்சிடாத நாளிதழ் கேட்டேன்.
அயல்நாட்டு அங்காடிகள்
அடங்கிட வழியுண்டா! எனக்கேட்டேன்.
மூலை முடுக்கெல்லாம்
முதியோர் இல்லம்
முளைத்திடுமா! எனக் கேட்டேன்.
மின்தடை இல்லா
இரவு நித்திரை கேட்டேன்.
அலைபேசியில் அரட்டைகள்
குறைந்திடுமா! எனக்கேட்டேன்.
அங்கங்கள் தெரியா
ஆடைகள் உண்டா! எனக்கேட்டேன்.
காடுகளை அழிக்கும்
ரம்பங்கள் மழுங்கிடுமா! எனக்கேட்டேன்.
காவேரி பிரச்சனை
கரைந்திடும் நாள் கேட்டேன்.
பொதிசுமக்கா கல்வியை
புகட்டும் நாள் வருமா! எனக்கேட்டேன்.
மதவெறி இல்லா
மன அமைதி அடைவோமா! எனக்கேட்டேன்.
சாதி பேதமில்லா நகரங்கள்
அமைந்திடுமா! எனக் கேட்டேன்.
லஞ்சம் வாங்கா உத்தமரை
காண பஞ்சம் வருமா! எனக் கேட்டேன்.
பாலியல் கொடுங்செய்தி
கேட்காத செவி கேட்டேன்.
பறைவைகள் எச்சில் இடாத
சிலை இருந்திடுமா! எனக் கேட்டேன்.
தாய்மார்கள் தேம்பி அழா
தொடர் வருமா! எனக் கேட்டேன்.
துப்பாக்கி தூக்கும் கைகள்
துவண்டிடுமா! எனக்கேட்டேன்.
உயிர்கொல்லி நஞ்சு உரம்
வீசாத விளைச்சல் கேட்டேன்
எண்சான் உடம்பில்
ஏழெட்டு சிகிச்சைகளா! எனக்கேட்டேன்.
சுடு காட்டில் பிணம் எரிக்க
பணம் கேளா வெட்டியானை
படைத்திடுவாய் எனக் கேட்டேன்.
இவையெல்லாம் மலர்ந்து
உலகம் அமைதி அடைந்திடுமா?
எனக் கேட்டேன்.
இதயங்கள் ஒன்றாகி
மனிதநேயம் மடைதிறந்தால்
இவையெல்லாம் இவ்வுலகில்
சாத்தியமே என சிரித்து
இறைவன் மறைந்தான்.