இரா. பால் ஜெபராஜ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : இரா. பால் ஜெபராஜ் |
இடம் | : கோயமுத்தூர் |
பிறந்த தேதி | : 03-Jan-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 157 |
புள்ளி | : 24 |
கவிதைகளை நேசிக்க தெரிந்ததால் நேசிக்கப்படுகிறேன் கவிதைகளால்...!
ஒரு பெண்ணின் அமைதி அவள் சம்மதம் என்றால் .ஒரு ஆணின் அமைதி சம்மதமா ?
உறக்கம் கெடுத்தாய்
எனக்கென புது உலகம் படைத்தாய்
கலவை இல்லாத அன்பு காட்டி
கவலை மறக்கக் கற்றுக் கொடுத்தாய்
எனக்காய் பிறந்தாய்
கனவிலே எனைக் களவு செய்தாய்
நிலவை ரசிக்கச் சொல்லிக் கொடுத்து
நிதமும் கவிதை எழுத வைத்தாய்
எப்போதும் உனை
நீங்காது இருப்பேன்
எனக்கென்று கிடைத்த
சொக்கத்தங்கம் நீதானே...
இப்போது நான்
அடித்துச் சொல்வேன்
அக்மார்க் முத்திரையிட்ட
காதல் பைத்தியம் ஆனேனே...
ஆதியிலே
கடவுள் இல்லை,மதமும் இல்லை.!
இந்து இல்லை.
இஸ்லாம் இல்லை.
இயேசு துதிக்கும்
கிருத்துவம் இல்லை.
இருந்தது எதுவெனில் ...
உருவில்
மிராண்டியாய்,
உணர்வில் மிருகமாய்,
தனித்தனியாய்...
திட்டுத்திட்டாய்...
வானரத்தின் வழிவந்த
ஓர் இனமே.!!
அவ்வினம் ....
இரையின் பொருட்டோ
இயற்கையின் பொருட்டோ,
எதிர்மிருகம் பொருட்டோ
எல்லாம் பொருட்டோ !
கூட்டமாய் சேர்ந்தது.!
கூடி இருந்த்தது.!
கூடியிருக்கப் புரிதல் வேண்ட
குறிப்பு சொன்னது
சைகைகளினால்...
குரல் கொடுத்தது
சப்தங்களினால்...
சப்தங்கள் சொல் ஆக,
சொல் தொடராக,
தொடர் திருத்தம் ஆக,
திருத்தங்கள் மொழியானது.!!
அம்மொழியே
இன்று வரை நீ சொன்னதில்லை
இயல்பாய் பூத்திருக்கும்
இன்னமுத காதலை!
எந்தன் உயிரோடு
உந்தன் உயிர் கலந்தவிட்டபின்னும்
இதயத்தில் மீட்டும்
காதல் ராகத்தை இன்னும் நீ
கூறவில்லை.
தாலி கட்டி
தாண்டி ஓடிய வருடங்கள்
ஐந்து ஆனபோதும்
உன் உதடு தாண்டி ஒருமுறை
வந்ததில்லை
உன்னை காதலிக்கிறேன் என்று.
கேட்டால் உள்ளத்தில் உள்ளதடி
சொல்லி தெரிய வேண்டியதில்லையடி
என்கிறாய்.
நான் இறந்தாலாவது
ஒருமுறை சொல்வாயா?
உன்னை காதலிக்கிறேன் என்று.
அதற்காகவே ஆசைபடுகிறேன்.
ஒருமுறை நான் இறந்துபோக.
காலையில் கதிரவன் பூக்கின்ற நேரந்தொட்டு
இரவின் மடியினில் கண்கள் மயங்கும் வரை
காதலின் நினைவின்றி வேறில்லை என்றாலும்
துயிலும் பொழுதும் அகலா நினைவுகள்
அல்லல் படுத்தும் ஒவ்வொரு நாளும்...!
பாராத நொடிகளும்
பேசாத நிமிடமும்
உறவாடளில்லாத சிற்சில சமயமும்
ஓடா மண் குதிரைபோல்
யுக யுகங்களாய்க் கழியும்...!
மனதில் காதல் இருந்திடும்போது
கோபங்கள் தாபங்கள் என்பதும் ஏது?
சகலமும் பொறுக்கும்
தன்மையாய் இருக்கும்
ஆழி பேரலையாய் அன்புதான் காட்டும்...!
சிறுசிறு செய்கைகள் செய்தாலும் கூட
ரசனையாய் இனிக்கும் ரசித்திட தோன்றும்
சிறுகீறல் உரசல்கள் தெரியாமல் படினும்
மண்ணுடல் மேனி உணர்ச்சியில்
நண்பர்கள் (6)

ஜின்னா
கடலூர் - பெங்களூர்

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

காதலாரா
தருமபுரி ( தற்போது கோவை )

tamilventhan
coimbatore
