ஒரு முறை இறந்துபார்க்க வேண்டும்

இன்று வரை நீ சொன்னதில்லை
இயல்பாய் பூத்திருக்கும்
இன்னமுத காதலை!

எந்தன் உயிரோடு
உந்தன் உயிர் கலந்தவிட்டபின்னும்
இதயத்தில் மீட்டும்
காதல் ராகத்தை இன்னும் நீ
கூறவில்லை.

தாலி கட்டி
தாண்டி ஓடிய வருடங்கள்
ஐந்து ஆனபோதும்
உன் உதடு தாண்டி ஒருமுறை
வந்ததில்லை
உன்னை காதலிக்கிறேன் என்று.

கேட்டால் உள்ளத்தில் உள்ளதடி
சொல்லி தெரிய வேண்டியதில்லையடி
என்கிறாய்.

நான் இறந்தாலாவது
ஒருமுறை சொல்வாயா?
உன்னை காதலிக்கிறேன் என்று.
அதற்காகவே ஆசைபடுகிறேன்.
ஒருமுறை நான் இறந்துபோக.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (6-Sep-14, 5:01 pm)
பார்வை : 131

மேலே