காதல் மங்கை

பொருனை நதிக் கரையினிலே
செம்பொழில் நந்தவனம் இருக்கையிலே
குளிர்ந்த தென்றல் அசைகையிலே
மெதுவா இலைகள் ஆடிடவே
மலரின் மணமும் பெருகிடவே
மாலை வேளையின் பிடியினிலே
பகலவனை இரவு கவ்வுகையிலே
வானும் நிலவை வரவேற்றிடவே
வந்தாள் மஞ்ஞையென மங்கை ஒருத்தி
தந்தாள் ஒரு பார்வையிலே
காதல் செந்தேன் சுவையினிலே
சொட்டச் சொட்ட நனைந்தேனே
வெள்ளமென வந்தது போல்
உள்ள உவகை பெருத்ததடி
கள்ளமிலாக் காதல் அமுது
பருகத் தான் தடையுண்டோ
மின்னல் அடித்த வெட்டினைப் போல்
காந்த வலையினை போடுகின்றாள்
ஏழு சுவரமும் மீட்டுகின்றாள்
கன்னல் மொழியைக் கேட்டவுடன்
யாழும் குழலும் தோற்றனவே
என் வாயும் அடைத்துவிட்டனவே
கண்ணைச் சிமிட்டும் வேளையிலே
விண்மீனோ என ஏமாந்தேன்
வந்தேன் போனேன் என்றில்லாமல்
என்றும் உன்னைத் தந்திடுவாய்

எழுதியவர் : ரமணி (6-Sep-14, 5:27 pm)
Tanglish : kaadhal mangai
பார்வை : 145

மேலே