விழியதிகாரம் - 5- சந்தோஷ்

விழியதிகாரம் 5


வர்ணனை-1 -விழியாளின் கூந்தல்.
-----------------------------------------------------------------


இதுவரையில் எந்த மங்கையிடமும்
இப்படியொரு காட்சி கண்டதில்லை -கொஞ்சிடும்
விழியாளின் பின்னந்தலையில்
கொட்டுகிறது கருங்கூந்தல் அருவி..!- வர்ணித்திட
தமிழ்மொழியாற்றலும் எந்தன்மூளையில்
வரமறுக்கிறது என்செய்வேன் என் தோழி..!

என் விரல்கள் கயல்களாகட்டும்
கயல்கள் அவள் கூந்தலருவியில்
துள்ளி துள்ளி விளையாடட்டும்..!
என் இதழ்கள் பூவாகட்டும்
பூக்ககள் அவள் கூந்தல்வீனையில்
பட்டுப்பட்டு இசைந்தாடட்டும்.


அய்யோ கம்பனே...!
என்கவிக்கு உதவிப்புரியாமல்
எங்கு சென்று தொலைந்தாய்..?
தேர்வறையில் விடையறியா மாணவனாய்
விழிப்பிதுங்கி கற்பனைவறட்சியில் தவிக்கிறேனே..!.

அடப்போயா..!
நானும் உன்னைவிட கொம்பனே..!

ஆஹா...! ஆஹா....!
அதோ....! அதோ...!
காற்றில் அசைந்தாடும்
அவள் கூந்தலிறக்கைகள்..!


ஆழிஅலைகளாய் காற்றுவெளியில்
மெட்டுப்போட்டு நடனமாடுகிறதே..! -நான்
மொழித்தோணியிலேறி ரசனைஜதியில்
தொட்டுத்தொட்டு கவி எழுதவா ?..

என்ன செய்வேன் என்ன செய்வேன்.
உவமை குரலின்றி என் கவிதை
ஊமையாகி தவிக்கிறதே...! !

(விழியதிகாரம்- வர்ணணை... தொடரும் )


-இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (6-Sep-14, 4:56 pm)
பார்வை : 121

மேலே