என் அன்பே நீ ஒரு வாத்தாகவே இருந்திருக்கலாம்

செலிமா ஹில் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பெண் கவிஞர் வெளியிட்ட
Portrait of my Lover as a Horse என்ற புத்தகத்தில் காதலனை நூறு விதமான
பொருட்களுடன் ஒப்பிட்டு சிறு சிறு கவிதைகளாக இயற்றியிருக்கிறார்.

அவற்றுள் ஒன்று:

வாத்துகள்,
சிறு நீர்க்குட்டைகளில் தத்துநடை போடவும்,
வெப்பமான பச்சைப் பாசிகளை உண்டு
கூடாரங்களில் ஒதுங்கி வாழவுமே
லாயக்கு! அதற்காகவே படைக்கப்பட்டுள்ளன!

என் அன்பே!
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
அமர்ந்து உண்பதற்காகவும்
அவைகள் படைக்கப்பட்டுள்ளன!
நீ ஒரு வாத்தாகவே இருந்திருக்கலாம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Sep-14, 4:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 93

மேலே