என் கண்ணனுக்காக
என் கண்ணனை நான் கண்டு
காதல் கொண்டு
இக்கவிதைதனை தருவேன் ............
நீலச்சோறு நான் ஊட்ட
நிலாவே சோறு ஊட்டுதென்று
நீ சொல்ல வேண்டும்...............
சந்திரனை நான் காட்ட
என் முகம்தனை
நீ பார்க்க வேண்டும்............
உலக அழகி நான் என்று
ஓயாது பொய்யாவது
நீ சொல்ல வேண்டும்..............
நானும் கொஞ்சம்
நனைந்திட வேண்டும்
நீ குளிக்கையில்........
கோபம்தனை நான் கொள்கையில்
என் இதழை ஈரமாக்கிட வேண்டும்
உன் இதழ்கள் ............
ஊடல் கொண்ட நேரத்திலும்
உண்மை அன்பை
நீ காட்டிட வேண்டும் ............
கூடல் கொள்ளும்
நேரத்திலும் காமம் இல்லா
காதல் வேண்டும் ...........
தவறு செய்த உன் காதினை
நான் திருக
செல்லம் வெல்லம் என்று கொஞ்சி
நீ கெஞ்ச வேண்டும்...............
நான் பெறாத பிள்ளை
நீயாக வேண்டும் ..............
நான் பெறவிருக்கும் பிள்ளை
உனதாக வேண்டும் ..............