நீர்

நீர்..

என்னுடைய துவக்கத்தில்.. தாங்கும் தொட்டிலாக..
தின வாழ்விலே.. உயிர் காக்கும் தோழனாக..
இளம் சாரலிலே ..குழந்தையின் கொஞ்சலாக..
வரப்பு ஓடையிலே.. இளம் தோழியின் தொடுகையாக..
கடும் மழையிலே.. கண்டிக்கும் தாயாக..
பெரும் வெள்ளமதிலே.. சீரும் துர்கையாக..
உண்ணும் வேளையிலே .. உற்ற மனைவியாக..
கண்ணும் கலங்கையிலே.. கனிவுடன் தாதியாக..
விண்ணும் சேர்கையிலே..பலர் விழி வழியாக
செல்லும் திசையெல்லாம் .. உடன் வருமே.. நீராக..!

எழுதியவர் : (6-Sep-14, 3:28 pm)
Tanglish : neer
பார்வை : 108

மேலே