வறுமை ஒழிப்பு தினம்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


*வறுமை ஒழிப்பு தினம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

உலக வரைபடத்தில்
என் தேசம்
வறுமை கோட்டினாலேயே
வரையப்பட்டுமோ..?

எனது நாட்டின்
இன்னொரு
தேசிய கீதம் வறுமை....

இந்தியா
சுதந்திரம் அடைந்து
வெள்ளிவிழா
பொன்விழா
வைர விழாவை எல்லாம்
கடந்து விட்டது....
இந்திய மக்கள்
என்னவோ
இன்னும்
வறுமைக்கோட்டையே
கடக்கவில்லை....

அரசியலுக்கு
வருகின்றவர்கள் எல்லாம்
வறுமையை
ஒழிப்போம் !
வறுமையை ஒழிப்போம் ! என்று
உரக்கச் சொன்னார்கள்....
உண்மைதான்
வறுமையை
ஒழித்து விட்டார்கள்
நாட்டில் அல்ல
அவர்கள் வீட்டில்....

இன்னும்
எத்தனை பேர்தான்
ஏழைகளை வைத்தே
பணக்கார்
ஆகப்போகிறார்களோ ..?

இன்னும்
எத்தனை குழந்தைகள்
தாய்ப்பால் சுரக்காமல்
அழும்போது
தாய் கண்களில்
இருந்து சுரக்கும்
கண்ணீர் துளிகளை
பால் என்று
பருகப்போகிறார்களோ....?

இன்னும்
எத்தனை காலம்தான்
பழையச்சோற்றுக்கு
உப்புகள் கூட
வாங்க முடியாமல்
கண்ணீர் துளிகளைப் போட்டு கரைத்துக் குடிக்க
போகிறார்களோ....?

இன்னும்
எத்தனை ஏழைகள்
தாகம் தீர்க்க
குடிக்க வேண்டியத் தண்ணீரைப்
பசி போக்கச்
சாப்பிட்டப்போகிறார்களோ...?

ஈரத்துணியை
வயிற்றில் சுற்றினால்
பசி போகும் என்று
சொன்ன எங்கள் விஞ்ஞானமே !
அப்படியே !
மழை வந்தால்
ஒழுகாமல் இருக்கும்
ஒரு மரத்தை
கண்டுபிடித்துக் கொடு
மரத்தடியில் தான்
குடும்பம் நடத்துகிறோம்....

இன்னும்
எத்தனை மனிதர்கள்
ஒட்டிய வயிற்றோடும்....
கந்தல் துணியோடும்....
ஓடாய் இளைத்து
தேகத்தோடும்......
ஒட்டுத்துணி
கட்டிய இடுப்போடும்.....
குழி விழுந்த
கன்னத்தோடும்.....
ஒளியிழுந்த
கண்களோடும்.....
குப்பைகள் படிந்த
தலையோடும்.....
அரை நிறுவனமான
உடலோடும்......
நடக்க சத்தியற்ற
நடை யோடும்.....
நடப்பிணமாய் வாழப் போகிறார்களோ.....?

உணவின்றி
உயிர்விட்ட உடல்களை
தயவு செய்து
'நெருப்பில்' எரிக்காதீர்கள்...
நெருப்பில் எரிய
என்ன இருக்கிறது?
அதுதான்
'எல்லாம்
எரிந்து விட்டதே!
பசியால்......

'ஊரை அடித்து
உலையில் போட்ட
காலம் எல்லாம்'
மலையேறி போய்விட்டது
இப்போது 'உலகத்தையே
அடித்து
உலையில்' போடுகிறார்கள்....!!

'காற்றுள்ள போதே
தூற்றிக்கொள்' என்ற
பழமொழி யார்
கடைபிடிக்கிறார்களோ
இல்லையோ....
அரசியல்வாதிகளும்
அதிகாரிகளும்
நடிகர்களும் நன்றாகவே
கடைபிடிக்கிறார்கள்....

'வறுமை ஒழிப்பு தினம் '
ஒவ்வொரு ஆண்டும் வருகிறது
'வறுமை ஒழிந்த தினம்' என்று
வருமோ......?

*கவிதை ரசிகன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (17-Oct-24, 9:04 pm)
பார்வை : 7

மேலே