உலக உணவு தினக் கவிதை

🍎🍏🍎🍏🍎🍏🍎🍏🍎🍏🍎

*உலக உணவு தினம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🍎🍏🍎🍏🍎🍏🍎🍏🍎🍏🍎

ஒரு சோற்றின் அருமையை
எறும்பிடம் கேட்டுப்பார்....
ஒரு பிடி சோற்றின்
அருமையை
நடைபாதை வாசிகளிடம்
கேட்டுப்பார் .....
ஒரு வேளை
உணவின் அருமையை
நடுத்தர ஏழையிடம்
கேட்டு பார்
தெரிந்து கொள்வாய்...

ஒவ்வொரு வேளையும்
ஒரே வகை உணவு என்பதால்
உண்ண முடியவில்லையே என்று உணவை வீணாக்குகிறோம்...
ஆனால்
ஒருவேளை
உணவு கூட
சாப்பிட முடியாமல்
தவிக்கும்
மனிதர்கள் தான்
எத்தனை எத்தனை.....

உணவில் சுவையில்லை என்று
உணவை வீண் செய்கிறோம் உணவே ! இல்லை என்று எங்கும் மனிதர்கள் தான்
எத்தனை எத்தனை......!

உணவில்
ருசி இல்லை என்று
உணவை வீண் செய்கிறோம்
பசிக்கு
பழையப் சாப்பாடு கூட
இல்லாமல்
பரிதவிக்கும்
மக்கள் தான்
எத்தனை எத்தனை....

சாப்பாடு
அளவுக்கு அதிகமாக
சமைத்து வீண் செய்கிறோம்... போதுமான அளவுக்குக் கூட
சமைக்க முடியாமல்
துன்பப்படும்
மனிதர்கள் தான்
எத்தனை எத்தனை.....

நேற்று சாப்பிட்டதை
இன்று சாப்பிட
தயங்குகிறோம்....
ஆனால்
என்று சாப்பிடுவோம் என்று
ஏங்கும் மக்கள் தான்
எத்தனை எத்தனை.....

தானங்களில் சிறந்தது
அன்னதானம் என்று
சொல்வார்கள்..
அன்னதானத்தை
நாம் செய்யாமல் போனாலும்
நாம் உணவுகளை
வீணாக்காமல் இருந்தால்
அதுவே
நாம் அன்னதானம்
செய்வதற்கு சமமானது தான்...

ஒருவருக்கு
உணவின் அருமை
தெரியவில்லை என்றால்
அவர் இன்னும்
பசியை நேருக்கு நேர்
சந்திக்கவில்லை என்றே
அர்த்தம்......!!!

_உணவு தின வாழ்த்து!_

*கவிதை ரசிகன்*

🍎🍏🍎🍏🍎🍏🍎🍏🍏🍎🍏

எழுதியவர் : கவிதை ரசிகன் (16-Oct-24, 9:00 pm)
பார்வை : 23

மேலே