இளமையில் இதயத்தில் இரவுநிலா பூக்கும்

இளமை இதயம் எழுதும் இலக்கியம்
இளமை இதயத்தின் இளவேனில் காலம்
இளமை இதயத்தின் எழில்தவழும் வானவில்
இளமையில் இதயத்தில் இரவுநிலா பூக்கும்

-----கலிவிருத்தம் பல வாய்ப்பாட்டில்
இள ---ஒரே அடி எதுகை
1 3 ஆம் சீரில் மோனை இ எ இ இ இ எ இ இ

இளமைதான் இதயப்பூ எழுதுகின்ற இலக்கியம்
இளமைதான் இதயத்தின் இளவேனில் காலமும்
இளமையே இதயத்தின் எழில்தவழும் வானவில்
இளமையில் இதயத்தில் இரவுநிலா பூத்திடும்

---விளம் காய் காய் விளம் எனும் ஒரே வாய்ப்பாட்டு கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-24, 9:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே