யாது தேடுதோ உன்விழி

மாதுளை முத்தினை மெல்லிதழ் சிந்திடுதோ
பாதிநிலா நெற்றியில்வெண் பாஎழுது கின்றதோ
போதவிழ்பூ புன்னகையில் பாடமென்ன கற்குதோ
யாதுதேடு தோஉன் விழி

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-24, 5:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே