உன் புன்னகைக்கு நன்றி சொல்லி பூக்கள் பூத்தனவோ

இன்று தோட்டம் ஏன் முழுதும் பூத்துக் குலுங்குகிறது
என்று நான் அதிசயத்துப் பார்த்தேன்
புன்னகை பூத்து நடக்கிறாய் போகும் இடமெல்லாம் நீ
உன் புன்னகைக்கு நன்றி சொல்லி பூக்கள் பூத்தனவோ ?

-----இயல்பு வரிகளில்

இன்றுதோட்டம் ஏன்முழுதும் இப்படி பூத்தது
என்றுவியப் பில்பார்த்தேன் எங்கெங் கிலுமேநான்
புன்னகை பூத்துநீ போகும் இடமெல்லாம்
புன்னகைக்கு நன்றிசொன்ன தோ

-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பாவாக

எழுதியவர் : கவின் சாரலன் (17-Oct-24, 6:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே