காதல் பைத்தியம்
உறக்கம் கெடுத்தாய்
எனக்கென புது உலகம் படைத்தாய்
கலவை இல்லாத அன்பு காட்டி
கவலை மறக்கக் கற்றுக் கொடுத்தாய்
எனக்காய் பிறந்தாய்
கனவிலே எனைக் களவு செய்தாய்
நிலவை ரசிக்கச் சொல்லிக் கொடுத்து
நிதமும் கவிதை எழுத வைத்தாய்
எப்போதும் உனை
நீங்காது இருப்பேன்
எனக்கென்று கிடைத்த
சொக்கத்தங்கம் நீதானே...
இப்போது நான்
அடித்துச் சொல்வேன்
அக்மார்க் முத்திரையிட்ட
காதல் பைத்தியம் ஆனேனே...