அன்னையின் பசுமை நினைவுகள்

..."" அன்னையின் பசுமை நினைவுகள் ""...

பாசத்தின் ஊற்று பசுமையாக
இயற்கையோடு இயற்கையாய்
அன்னையின் முதுகில் சாய்ந்து
பச்சை வயல்வெளி ஊர்வலம்
இன்முகத்தே புன்னகையோடு
அன்று வயிற்றில் இன்று முதுகில்
என்னை சுமப்பதில்தான் உனக்கு
எத்துனை ஆனந்தம் என் அம்மா
உந்தன் வியர்வையின் வாசம்
பன்னீராகி சுகந்தம் தருகிறது
துள்ளி குதிப்பான் சுட்டிப்பையன்
நானென்று கைபிடித்தது போதாதென
கருணையாய் உன் கை மடக்கி என்
கால்களையும் பிடித்துக்கொண்டாய்
உன் அன்பிற்கு ஏதம்மா அளவுகோல்
காணி நிலமுமில்லா ஏழைதான் நாம்
இருந்தும் ஆயிரமுறை ஆசையாய்
நீ அழைப்பாய் என் ராசா நீயென்று
அன்னையே உன்னை எண்ணியே
என்மனமிங்கு துடிக்குது நன்றியே ,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (7-Sep-14, 10:47 am)
பார்வை : 231

சிறந்த கவிதைகள்

மேலே