சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதைப்போட்டி 2015

சாதியெனும் சாக்கடையில்
நீதி கொன்ற பேய்களே கேளுங்கள் !
பாதி பாதி பிணங்களாய்
மாண்டுவரும் மாந்தரே கேளுங்கள் !

பேயினும் கொடிய பேய் நீங்களே
தன்னை தானே அழித்துக்கொண்டீர் தாங்களே !

மதமெனும் மாத்திரையில் இறந்துவரும் சவங்களே கேளுங்கள் !
கரம் கொண்டு சிரம் கொய்ய காரணம் நீங்களே !

சாதி மத பேதமெனும் சந்தர்ப்ப சூழல்கள் !
மனிதரை அழித்திடும் கற்கால மோதல்கள் !

உயர்சாதி தாழ்சாதி என்றொன்று உண்டோ !
மனிதரை மனிதரே வதைத்தாலும் நன்றோ !

உயரிய எண்ணத்தை விதைப்பதுவே முறை !
சாதி மத கோட்பாடு மாந்தருக்கு சிறை !

மனிதஇனம் வேரூன்ற நீ மாறவேண்டும்!
மேற்சொன்ன சகதிகளை தூர்வாரவேண்டும் !

தீஞ்செயல் புரியவே சேர்ந்திடும் நீரும் !
சாதி மதம் அழித்திட கரைபுரண்டு வாரும் !

குரோதங்கள் வைத்து குறிவைக்கும் மனிதா !
வாழ்வது ஒருமுறை உயிரென்ன பெரிதா !

சாதிக்கும் எண்ணங்கள் எவருக்கு உண்டு !
அவர்மட்டும் வாருங்கள் அழித்திடுவோம் என்று !

கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை (சாதி மதங்கள் ) இன்று
கண்கட்டி அடித்திட சந்தர்ப்பம் உண்டு !

இந்தக் கவிதை என்னால் புனையப்பட்டது என உறுதியளிக்கிறேன்

ப.சுகுமாறன்
தா /பெ பழனிச்சாமி
பிள்ளையார் கோவில் தெரு ,
ம.கல்லுப்பட்டி ,பேரையூர் தாலுகா ,
மதுரை மாவட்டம் , pin: 625535
கைபேசி:9655660922

எழுதியவர் : ப.சுகுமாறன் (9-Jan-15, 9:13 pm)
பார்வை : 105

மேலே