ஹாசினி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஹாசினி
இடம்:  கொழும்பு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Jan-2015
பார்த்தவர்கள்:  284
புள்ளி:  30

என் படைப்புகள்
ஹாசினி செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
06-Mar-2016 7:48 am

மன்னித்து விடுங்கள் சொந்தங்களே இருவரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என நம்பும் முட்டாள்களில் இவளும் ஒருத்தி...இன்றும் ஏதோ கிறுக்கி விட்டேன் பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். !


உயிரிழந்த பட்டாம்பூச்சி
இலையுதிர்ந்த விருட்சம்
ஜன்னலில் பறக்கும் சீலை.(1)

பால் கிண்ணத்தில்
கயல் விளையாடுகிறது
நதியில் நிலா(2)

உதிரம் தோய்ந்த வானம்
கோப அலைகளோடு ஈழத்தில் மண்டைஓடுகள்(3)

புரட்சி சிந்துகிறது
எழுத்தாளனின் வற்றிய
பேனா(4)

மலட்டு மேகம்
கட்டறுத்து ஓடும் காட்டாறு
விவசாயியின் கண்ணீர்
(5)
ஜாதிக் கொலை
நிகழ்த்திய அமைச்சர்
மேடைப்பேச்சு ஒன்றே எங்கள் ஜாதி(6)

நிசப்த இரவில்
நிகழும் சுகப்பி

மேலும்

சிறப்பான ஹைக்கூ அனைத்தும் புரட்சி சிந்துகிறது எழுத்தாளனின் வற்றிய பேனா உண்மையான வரிகள்...... 31-Mar-2016 4:04 am
ஹைக்கூ வரிகள் அனைத்தும் அருமை ! 29-Mar-2016 3:45 pm
அருமையான வரிகளுடன் படைப்பு 28-Mar-2016 8:51 pm
அனைத்தும் மிக அருமை..! வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 11:56 pm
காதலாரா அளித்த படைப்பை (public) பா கற்குவேல் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
27-Dec-2015 12:21 am

காட்சிப் பிழைகள் - 16 - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுழன்று சுற்றும் வெளியில்
பார் செதுக்கும் விழியால்
எனை யாரென ...பார் ...
அது காதல் யுக வேர் ...

குறுகிக் கிடக்கும் உன்னிடை
திருகிச் சிவந்த என்விரலில்
பெருகி அவிழும் வரிகளை
பருகி மடிந்தது நம்மிதழ்...

பிரிவின் பின் ..திரையில்
விரியும் முத்த முடிவில்
உன் மொத்த உருவத்தால்
ஓங்கி அறைகிறாய்
என்னிரு கன்னம் வீங்க ...

தேகத்தின் ரோமத்தில்
மோகத்தின் வேகத்தை
வானத்தின் கோபமாக்கி
பாலைவன தாகத்தில் சுடுகிறாய்...


உனக்கான கவிதைகளை..
படிக்காமல் புதைப்பதை விட ..
என்னுடல் புதைக்கையில்
ஏதேனும் எழுதி வி

மேலும்

வாழ்த்துக்கள். கவிதை அருமை ! 18-Jan-2016 2:30 pm
அழகிய சொல்லாடல் நிறைந்து கவிதை தாலாட்டுகிறது ! 18-Jan-2016 10:18 am
யப்பா என்னவொரு வீரியமான சொல்லாடல்.. அசத்தி இருக்க ராஜ்.. இதுதான் தம்பி...யின் எழுத்து.. இத்தொடரில்.. நீயுமொரு கஸல் நாயகன்.. .. வா தம்பி.. கட்டியணைத்து பாராட்டுகிறேன். நாடி நரம்பு சதை புத்தி எல்லாம் காதல் உணர்வேறிய ஒரு கவிஞன் எழுதிய இப்படைப்பு.. சபாஷ் சபாஷ் சபாஷ்.. 12-Jan-2016 9:46 pm
மகிழ்ச்சி தங்கச்சி 07-Jan-2016 5:39 am
கார்த்திகா அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Dec-2015 12:09 am

தலை குனிந்து
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறாய் நீ
இமைகளைக் கட்டவிழ்த்து
மெல்லப் பருகுகிறேன்

என் வயலெட் வண்ணப்பூக்கள்
என்னைப் போலவே
உன் பார்வைத் தொடுதல்
அறிந்து நகர்வதேயில்லை

நீ நான்
நான் நீ
இடம் பொருள் மறந்து
காதல் செய்கிறது
என் விழிகளிரண்டும்

இமை கவிழ்த்து
உறங்கினால் சென்றுவிடாதே
கனவுகள் கொள்ளை போகட்டும்
இன்றும் நாளையும் கூட

உன் அருகாமையின் இதம்
ஜென்மங்களின் அரும்புதலில்
மற்றுமொரு முன்பனிக்காலம்

இழையாய்
இதழ் பிரித்துச் சிரிக்கிறாய்
உதட்டின் ரேகைகளில்
சிவக்கிறேன் நான்

உன் விரல் நுனி
நகமாவது வெட்டி
விட்டுச் செல்
என் காலைகள் பூக்கட்

மேலும்

மிக்க நன்றி நட்பே.... 13-Feb-2016 10:46 am
அடடா அற்புதம் தோழி..வாழ்த்துக்கள் 11-Feb-2016 8:26 pm
மிக்க நன்றி தோழமையே......மிக்க மகிழ்ச்சி.... 02-Feb-2016 6:21 pm
வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி தோழமையே.... 02-Feb-2016 6:20 pm
கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
31-Dec-2015 4:17 am

காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்)

காதல்
ஒரு மந்திர கோல் .....
இரண்டு இதயங்களை ....
ஒன்றாக்கி விடும் ....!!!

நெற்றியில் ...
குங்கும பொட்டு.....?
அப்பாடா - சாமி ....
கும்பிட்டு வருகிறாள் ....!!!

தேவனிடம் ....
பாவ மன்னிப்புக்கேட்கிறாள் ....
என்னிடமும் கேட்பாள் .....!!!

^^^

கனவு
நிஜத்தில் நிறைவேறாத ...
ஆசைகளை நிறைவேற்றும் ....
நீர்க்குமிழி .....!!!

திடுக்கிட்டு எழுந்தாள் ....
தாலியை கண்ணில் வணங்கி...
என்னை பார்த்தாள் ....!!!

இன்னும்
சற்று தூங்கியிருந்தால் ....
சொர்கத்தை.........
பார்த்திருப்பேன்....!!!

^^^

நீ என்னை ....
காத

மேலும்

Enna solvathu ithanai karuthuku பின் Vszthukal 19-Feb-2016 8:46 pm
இத்தனை சிறப்புகளா ...? 26-Jan-2016 8:44 pm
பதிலுக்கு நன்றி 25-Jan-2016 8:36 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Nov-2015 1:37 pm

கார்த்திகை
கடவுள்களின் மாதமாம்
ஆம்
நாத்திகன் நானும் நம்புகிறேன் .

கல்லான கடவுள்களுக்கு
நீங்கள்
கற்பூரம் காட்டுங்கள் .
கல்லறையில் வாழும்
கடவுள்களுக்கு
நான்
கண்ணீரில் அபிஷேகம்
செய்கிறேன்.

மகாபாரதத்தில் கிருஷ்ணரும்
இராமாயணத்தில் இராமரும்
கதாநாயகர்கள்
கதைகளில் படிக்கிறோம்
கடவுள் என ஏற்கிறோம் .

எம் உயிர்காக்க
தம் உயிர் நீத்த
ஈழப்போரின் வேந்தர்களை
எங்கே நாம் நினைக்கிறோம் ?

பொன்னுக்கும் பெண்ணுக்கும்
போராடி இருந்தால் ஒருவேளை
காவியமாகி இருக்கலாம் -இவர்களின்
தியாகங்களும்.

தமிழுக்கும்
தாய் மண்ணுக்கும் என்றால்
தயக்கம் தான்
தமிழனுக்கும் .

துயில்

மேலும்

ungal kavidhai vanakkathirkuriyavai . 21-Dec-2019 9:56 pm
தமிழ் சமூகத்திற்கு தமிழனால் செய்ய முடிந்ததொரு படைப்பு... மிக சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Nov-2015 11:37 pm
அருமையான அர்ப்பணிப்பு படைப்பு. 22-Nov-2015 7:00 pm
நன்றிகள் சர்பான் . 22-Nov-2015 5:48 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
ஹாசினி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2015 11:47 pm

அமெரிக்கன்:- நாம தான் முதன்முதலாக விண்வெளிக்குப் போனோம்..

ரஸ்சியன் :- நாம தான் முதன்முதலாக நிலவுக்குப் போனோம்..

நம்மாளு :- நாம தான் முதன்முதலாக சூரியனுக்குப் போனோம்..

அமெரிக்கன்:- பொய் சொல்லாதடா, சூரியனுக்கு கிட்டப் போனாலே எரிஞ்சிடுவாய்..!

நம்மாளு :- போடா மடையா, நாங்க போனது இரவில்…!! (விடுவமா நாங்க..?)

மேலும்

ஹாசினி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2015 11:46 pm

கணவன்: உங்க அப்பா போல் இந்த உலகத்தில் ஒரு முட்டாள் இல்லை.

மனைவி: இது இப்பத்தான் உங்களுக்கு தெரியுமா? எனக்கு பத்து வருசம் முன்னாடியே தெரியும்.

கணவன்: எப்படி?

மனைவி: உங்களை எனக்கு கல்யாணம் பண்ணி வாச்சுருக்காரே… இது ஒண்ணு போதாதா?

மேலும்

ஹாசினி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2015 11:38 pm

அதிகாரி - என்ன இண்டைக்கு மணியண்ணை வேலைக்கு வரேல்ல போல இருக்கு

ஊழியர் - ஆமாங்க... அவரு ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்களாம்

அதிகாரி - என்னாச்சு... நேற்று பின்னேரம் தான் பார்த்தனே... யாரோ ஒரு பொண்ணு கூட போயிட்டு இருந்தாரே. நல்லா தானே இருந்தார்.

ஊழியர் - அதை அவரோட மனைவியும் பார்த்திட்டாங்க. பிரச்சனையாகிடுச்சு

மேலும்

கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) MALAIMANNAN.T மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Jul-2015 5:09 pm

சாதிக்கா பிறந்தேன் நான்
இல்லையே
சாதிக்க பிறந்தேன்
வாய் திறந்து சூளுரைக்க
சுருண்டு விழுந்தேன் மண்ணில் .

தந்தையின்
இரும்புக் கரங்கள் இடியாய்
பதம் பார்த்தது கன்னத்தை .

சாதி தான் நமக்கு சாமி
தெரிந்துகொள்
பக்க வாத்தியம் வாசித்தால்
சாத்தானிடமே சாதிபார்க்கும்
அப்பன பெத்த ஆத்தா .

அப்பா சொன்னா கேளும்மா
அடி வாங்கி சாகாத
அம்மா மனசு தாங்குது இல்ல
முந்தானை தலைப்பால்
மூக்கை துடைத்துக்கொண்டாள்
அம்மா.

தினமும் திட்டுபட்டும் திருந்த மாட்டாயா நீ .
பயம்கலந்த பாசத்தோடு
அக்கா .

முயலாதே தங்கையே
முடங்கி போவாய் .
சாதியால் காதலை
சாதலுக்கு
அள்ளிக்கொடுத்த
அண்ணன் .

மேலும்

வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி கயல்.. 26-Aug-2015 10:12 am
நன்றி நன்றிகள் அண்ணா 25-Aug-2015 11:21 am
நன்றி நன்றிகள் தோழி 25-Aug-2015 11:19 am
அச்சோ நட்பே வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை . தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் . 25-Aug-2015 11:18 am
ஹாசினி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2015 11:21 am

ஒரு தாய் தனது சிறு வயது மகளை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் போனார்.

"நீங்க பாவம் ல டாக்டர் அங்கிள்..?" - சிறுமி

"ஏன்டா குட்டி... அப்பிடி சொல்ற..." - டாக்டர்

"பகல்ல உங்களுக்குக் கண் தெரியாது ல. அதான்...?” - சிறுமி

“நல்ல தெரியுமே…யாருமா சொன்னது தெரியாது னு…­?”

“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு
வெச்சிருக்கீங்க­ளே… அதான் கேட்டேன்.!” - சிறுமி

"ஞ்சே...."

மேலும்

நகை இனிமை! 22-Aug-2015 7:15 pm
ஹா ஹா ஹா...இந்த காலத்து பிள்ளைகள் இப்படி..அருமை 02-Jul-2015 12:47 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) KESAVAN PURUSOTH மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Jun-2015 6:05 am

ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தேன் .
ம்ம்ம் கவிதையாம் .
பைத்தியகாரி
எனக்கு நானே வசைப்பாடிக்கொண்டேன் .

பர்மா கொடூரத்தை தடுக்க நினைத்தேனா.?
ஓடுகின்ற குருதி ஆற்றை நிறுத்த நினைத்தேனா .?

ஒடுக்கப்பட்ட இனங்களுக்காய்
ஓயாமல் உழைத்தேனா .?
இல்லை
பறிக்கப்பட்ட உரிமைகளை
பாதியேனும் கொடுத்தேனா .?

பாலியல் கொடுமைகளுக்கு நீதி
கேட்டேனா.? - இல்லை
பாதிக்க பட்டவர்களுக்காய் போராடி மாண்டேனா.?

சாதி மதம் வேண்டாம் என்று
ஐ.நா .சபை சென்றேனா .?
அங்கு
அடக்குமுறை வேண்டாம் என்று
அதிரவைத்து வென்றேனா.?

அரசியல் சாக்கடை என்று அறியாமல் இருந்தேனா .?
அறிந்து அதற்கு ஐயா,சாமி
போடாமல் சென்றேனா .?

மேலும்

அருமை 25-Jul-2015 8:24 pm
மிக அருமை தோழமையே 25-Jul-2015 11:11 am
இயலாமை பற்றி வருந்துகிறது கவிதை 20-Jul-2015 12:04 pm
நன்றிகள் தோழி . 28-Jun-2015 9:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (52)

இவர் பின்தொடர்பவர்கள் (52)

இவரை பின்தொடர்பவர்கள் (52)

ஹஸீனா அப்துல்

ஹஸீனா அப்துல்

தென்காசி
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே