வீர வேங்கைகளுக்கு என் வீர வணக்கங்கள் -கயல்விழி

கார்த்திகை
கடவுள்களின் மாதமாம்
ஆம்
நாத்திகன் நானும் நம்புகிறேன் .

கல்லான கடவுள்களுக்கு
நீங்கள்
கற்பூரம் காட்டுங்கள் .
கல்லறையில் வாழும்
கடவுள்களுக்கு
நான்
கண்ணீரில் அபிஷேகம்
செய்கிறேன்.

மகாபாரதத்தில் கிருஷ்ணரும்
இராமாயணத்தில் இராமரும்
கதாநாயகர்கள்
கதைகளில் படிக்கிறோம்
கடவுள் என ஏற்கிறோம் .

எம் உயிர்காக்க
தம் உயிர் நீத்த
ஈழப்போரின் வேந்தர்களை
எங்கே நாம் நினைக்கிறோம் ?

பொன்னுக்கும் பெண்ணுக்கும்
போராடி இருந்தால் ஒருவேளை
காவியமாகி இருக்கலாம் -இவர்களின்
தியாகங்களும்.

தமிழுக்கும்
தாய் மண்ணுக்கும் என்றால்
தயக்கம் தான்
தமிழனுக்கும் .

துயில்கொள்ளும் நீங்கள்
விழித்தெழுவீர் -எம் துயர் நீக்கி
தொலைந்த உரிமை வெல்வீர் .

நன்றி கெட்டோர் மறக்கட்டும்
வீர மறவர் மட்டும் உம்மை நினைக்கட்டும் ....!


விதையாய் வீழ்ந்த உறவுகளுக்கு என வீர வணக்கங்கள் .

எழுதியவர் : கயல்விழி (22-Nov-15, 1:37 pm)
பார்வை : 253

மேலே