கல்லூரி
காற்றுக்கு சுலபமாக
விலைசொன்ன நாட்கள்.....
மறைத்து வைக்க முடியாமல்
மௌனத்திற்கு விடை கொடுத்த
நாட்கள்.....
சுகமாய் என்றும் நினைவில் இருக்க
பதில் சொல்ல முடியாமல்
தவித்த நாட்கள்.......
வெற்றியில் மகிழ்ச்சியும்
தோல்வியில் நட்பையும் தெரிந்து
கொண்ட நாட்கள்......
காக்கை போல பகிர்ந்து உண்ட
நாட்கள்......
பிரிவுகள் எதிர்கொள்ள முடியாமல்
வருங்கால கனவுகளில் பயணங்கள்
இன்றும் தொடர்கிறது.......