மண்ணில் -சீர்தரும் சொர்க்கம்

சீர்தரும் சொர்க்கம்

ஆடை யலங்காரமில்லை,
அணிகலன் களேதுமில்லை;
சிகை யலங்காரமில்லை-
சிவப்பு சாயங்களுமில்லை..!

தாவணி யுடுத்துவதுமில்லை,
தாவித் திரிவதுமில்லை;
இச்சை எண்ணமுமில்லை -
இன்ன லுறுவதுமில்லை..!

பருவம் அறிவதுமில்லை,
பழியை சுமப்பதுமில்லை;
தீட்டுப் பழக்கமுமில்லை -
திசைக ளறிவதுமில்லை..!

தேடி யலைவதுமில்லை,
தெரிந்து மறைவதுமில்லை;
பகையை யறிவதுமில்லை-
பார்த்து நடுங்குவதுமில்லை..!

எழுந்து நடப்பதுமில்லை,
ஏக்க அலைகளில்லை;
வழிகள் மறைப்பதுமில்லை-
வாழ்வை கெடுப்பதுமில்லை..!

போதும் மனத்துடனே,
பொருமை யவள்காத்தாள் ;
எதுவு மில்லையென்று -
எல்லா மடைந்தவளாய்..!

அமைதி யெனும்வுருவாய்,
அழகை அடைந்துவிட்டாள்;
இருக்கு மிடத்திலேதான் -
இன்பம் என்றுரைத்தபடி...!

எல்லையில்லா உறவில்,
என்னை யேங்கவைத்தாள்;
கற்பனைக் காதலெல்லாம்-
கண்ணில் காட்டிவிட்டாள்..!

சித்திரத் தோரணையிலே,
சிந்தையைத் தூண்டியவள்;
சிரிக்கு மொருபார்வையோ-
“சில்”லென இனிக்குதடி..!

சொந்தம் பந்தமெல்லாம்,
சுழல்கிற பூமியின்மேல்;
சீர்களைச் சுமந்துவர -
சீக்கிரம் வாயென்றாள் ..!
சொர்க்க மிதுவேயென்றாள்..!!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (9-Jan-15, 10:07 am)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 67

மேலே