தை பொங்கல் தைப்பொங்கல் கவிதைபோட்டி - 2015

வீதியிலே பொங்கல் வைத்தான்
விவசாயி விருந்தோம்பலை பேண - அதைச்
சட்டியிலே வீட்டில் வைத்து
சண்டை இட்டார் சாதிப் பெயரால்
சதிகாரர் பலர்!

உயிர் கொடுத்து உழைத்து உணவிடும்
உயிர்களுக்கும் உணவிட்டான் உணர்ச்சிப் பெருக்கில் விவசாயி.
உருவம் செய்து, உடை உடுத்தி, ஊர் சுற்றி,
உல்லாசித்து உரக்கக் கூறுகிறான்
மாட்டுப் பொங்கல் என தன் வீட்டு மாடியில் நின்று...!

மனிதம் மலர வேண்டுமென மிருகங்களிடமும்
மனமிரங்கி அன்பு கட்டிடவே பொங்கும் பொங்கல்.
மனிதனையும் மிருகமாய் மதிக்கும் மானுடரே !
மரித்தபின் ஏதுமில்லை உன்னுடனே..!

எழுதியவர் : வி. பாலா/- பொள்ளாச்சி, 9976144451, (9-Jan-15, 3:08 pm)
பார்வை : 1287

மேலே