கனவுக் கவிதை

என் கனவில் வந்த -
ஒரு கவிதை...?

பறக்கத் துடிக்கும்
எனக்கு - சிறகுகள்
இல்லை...!
பறவைகளே -
என்னையும் கூட்டிச்
செல்லுங்கள்...!

வானத்தையே வருடும்
சுத்தக் காற்றையே
சுதந்திரமாய் - சுவாசிக்க
பறவைகளே -
என்னையும் கூட்டிச்
செல்லுங்கள்...!

நீர் கொண்ட
மேகங்களை -
மாதந்தவறாமல் - நின்று
நீர் ஊற்ற -
யாசிக்க ...?
பறவைகளே -
என்னையும் கூட்டிச்
செல்லுங்கள்...!

நிழல் தரும் - உமக்கும்
தங்க இடம் தரும்
பச்சை மரங்களை -
வெட்டாமல்
பத்திரமாய் பாதுகாக்க ...
பறவைகளே -
என்னையும் கூட்டிச்
செல்லுங்கள்...!

ஆற்று படுகைகளின்
மனலை - அள்ளிச்
செல்லாமல்
அடைகாக்க ...
நிலத்தடி நீருற்றை
பேணிக் காக்க ...
பறவைகளே -
என்னையும் கூட்டிச்
செல்லுங்கள்...!

இமைகளே - திறவாதீர்...?
கனவிலாவது - என்
விழிகள் - உலகை
சத்தமின்றி பசுமையாய்
யுத்தமின்றி அமைதியாய்
ரத்தமின்றி வேர்வையாய்
குற்றமின்றி நேர்மையாய்
பார்க்கட்டுமே ...!

சங்கீதக் குரல் கொண்டு -
உலகையே விடியச் செய்யும்
பறவைகளே -
விடியலை
சற்று தாமதப்படுத்துங்கள் ...?
என்
கனாக் காணும்
காலத்தை - நீட்டிக்க ...!

எழுதியவர் : சு. ஈ. பிரசாத் (9-Jan-15, 5:57 pm)
Tanglish : kanavuk kavithai
பார்வை : 113

மேலே