இப்படி நாம் காதலிப்போம் - கவிதைப் போட்டி - 2015

இதழ் விரித்த மலரை - உன்
இதழ் விரித்துத் தீண்டினாயே!.
இதைக் கண்டதும் - எனது
இதயத்தையும் சீண்டினாயே!

மலருக்கு
முத்தம் கொடுத்த
மலரே! - என் இதய
மலரும் உனக்காகவே
மலரும். - கண்ணே! என்

விழி வலைக்குள் உன்
விழிமீனும், விரிந்த இதழும்
விழுந்ததால் -காதல்
விலாசத்தை என்னுள்
பதிவு செய்துள்ளது.

பூவிதழை - உன்
பூ இதழால் முத்தமிட்டதால்
பூவுக்கு(ள்) தேன் சுரந்ததோ! - அன்றி
பூவிதழுக்குத் தேனைத் தந்ததோ!
பூவுக்குள் பூ- கம்பம் (நட்டவளே!) தூவியவளே!
பூ வெடிக்காமல் பூத்தது இதனால் தானோ!
பூவே! உன்னால் நானும், எனை நினைந்தே நீயும்
பூத்துக் கொண்டேக் காதலிப்போம்.

இந்தக் கவிதை என்னால் புனையப் பட்டதாகும் என உறுதி அளிக்கிறேன்.
பெயர் : ச. சந்திரமௌலி வயது - 17 முகவரி : 100பி/2.ஏகம்பரநாதர் சன்னதி தெரு, பெரிய காஞ்சிபுரம் 2. அஞ்சல் வழி - 631 502. எனது நாடு - இந்தியத் தாய்த் திருநாடு.

எழுதியவர் : ச. சந்திர மௌலி (9-Jan-15, 2:36 pm)
பார்வை : 158

மேலே