சாதி ஒழி மதம் அழி சாதி “பொங்கல் கவிதை போட்டி 2015”

மாற்றுத்திறனாளிகளே இல்லாத..
மதமிருந்தால் சொல்லுங்கள்
மதமாற்றம் செய்ய..
நானும் தயார்..

பாதைகள் அனைத்திலும்..
தடைகள் இருக்கும்போது..
தாண்டிச் செல்லாமல்..
வேண்டிச்செல்ல முடியுமா.?

தன்னம்பிக்கை விதைவிதைத்து..
முயற்சியென்ற உரமிட்டு ..
வெற்றிகளை அறுவடைசெய்..
ஆண்டவனே அங்கிருப்பான்....
உன்மதத்திற்கு அவன்மாறி..
உலகையும் வாழவைப்பான்
உனக்குப் பிடித்தமதம் - ஒருநாள்
உன்னைப்பிடிக்கும் நிலை வரலாம்..
சாதிமத பேதம் கொண்ட..
'மா'நீ தன்னிலை துறந்து..
மனிதன் நிலைக்கு உயர..
சாதி ஒழி ! மதம் அழி! சாதி !
உடலில்லா உயிர்போல..
மதமில்லாத மறுகனமே..
சாதியதும் சாம்பலாகும்

[இந்தப்படைப்பு என் சொந்த படைப்பென உறுதியளிக்கிறேன் , பெயர்: சுந்தர் ,வயது: 30 , வசிப்பிடம்: சென்னை , அழைப்பிலக்கம்: 9710192798 ]

எழுதியவர் : sundar (10-Jan-15, 3:47 pm)
பார்வை : 233

மேலே