தைத் திருநாள்

தைத் திருநாள்:

தமிழனின் திருநாள்..!
தமிழனின் முப்பெரும் திருநாள்..!
நம் வாழ்க்கையை ஒளிரூட்டும் திருநாள்..!
நம் வீட்டை வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கும் திருநாள்..!
பழையதை கழித்து புதியதை வரவேற்கும் திருநாள்..!
விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் திருநாள்..!
உழவனின் உழைப்பை போற்றும் திருநாள்..!
உழவனுக்கு நன்றி செலுத்தும் திருநாள்..!
சீறி வரும் காளையை திமிருடன் அடக்கும் திருநாள்..!
உலகிற்கு குறள் என்னும் வாழ்க்கை நெறிகளை கற்றுவித்த வள்ளுவனின் திருநாள்..!
பாரெங்கும் மகிழ்ச்சியை பரப்பும் திருநாள்..!

தமிழுக்கும், கடல் கடந்து வாழும் தமிழர் அனைவருக்கம்....
என் மனமார்ந்த தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பொங்கும் பாலை போல உங்கள் மனதிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

கிஷோர் ராம்தாஸ்

எழுதியவர் : கிஷோர் ராம்தாஸ் (10-Jan-15, 4:54 pm)
Tanglish : daith thirunaal
பார்வை : 2235

மேலே