இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதைப் போட்டி -2015

வளர்ந்து வரும் பிறைமனத்தின்
வண்ணமிகு எண்ணத்தைக்காட்டி-
மலர்ந்து வரும் ஆசைகளை
மடலோவியமாய்த் தீட்டிக்காட்டி-
துளிர்ந்து வரும் இளமைஅழகில்
துள்ளிடும் வீரத்தைக்காட்டி -
மிளிர்ந்து வரும் மெல்லினத்தை
மேனிசிலிர்க்கக் காதலிப்போம்.

சங்ககாலத் தமிழனைப்போல்
சந்தனப் பொட்டிட்டிடுக்காட்டி-
மங்காத புகழ்படைத்த பட்டாடை
மல்லிநிறத்தில் உடுத்திக்காட்டி-
எங்கும் உன்னழகைக் காண்பதாய்
இருகண்கள் சிமிட்டிக்காட்டி-
பொங்கி வரும் பால்மனத்தால்
பூமனத்தாளைக் காதலிப்போம்.


தஞ்சைக் கோபுரம்போல்
தன்மானத்தின் உயரங்காட்டி-
நஞ்சை நிலம் தந்திடும்
நெல்மணியாய்த் தங்கம்காட்டி -
வஞ்சமில்லாமல் அதனை
வாரிவழங்கும் வள்ளன்மை காட்டி -
நெஞ்சில் நிறைந்த மஞ்சள்முகத்தாளை
நீங்காமல் நாளும் காதலிப்போம்.

படைப்பின் உரிமையாளர்
பெயர் : மா. அருள்நம்பி.
வயது : 51
இருப்பிடம் : கூடங்குளம்.
அழைப்பிலக்கம் : 9940733295.
நாடு:தமிழ்நாடு

எழுதியவர் : மா. அருள்நம்பி (10-Jan-15, 3:34 pm)
பார்வை : 91

மேலே