அடையாளம்

தேடிப்பார்க்கிறேன்
தெரியவில்லை எதை தேடுகிறேன்.....
இழந்து போன வசந்த காலத்தையா?
பறிககப்பட்ட என் சுதந்திரத்தையா?
கொல்லபட்ட என் சொந்தங்களையா?
தொலைந்து போன பந்தங்களையா?
இருந்தால் தானே.....


உயர்பாதுகாப்பு வலையத்திலாம்
எங்கள் வீடு...
அழைத்து செல்வேன் உங்களையும்
என்றே கூறி ஒரு நாள்
பார்க்கப்போன அப்பா
திரும்பி வந்தார்...
உயிரின்றி.....



அழுதழுதே
ஆயுள் தேய்கிறது அம்மாவுக்கு
ஐயிரண்டே வயது தான்
அண்ணாவுக்கு...
அடுப்பெரிக்க விறகெடுக்க
சென்றவன் தான்..
அடுத்த நாளே அவன் மீது
அடுக்கி வைத்து விறகை
அடக்கம் பண்ண வேண்டியாயிற்று...


வயிற்றுப்பசிக்கு
வழி தேட நானும்...
வெளியே போக ...அம்மா தடுத்தாள்..
வயது ஐந்தாகிறது உனக்கு
அடையாள அட்டை கேட்பார்கள்... இல்லையோ
அடையாளத்தையே அழித்து விடுவார்கள்.......

நான்??????????????

எழுதியவர் : அஜந்தா ஜினி பகீரதன் (11-Jan-15, 10:35 am)
Tanglish : adaiyaalam
பார்வை : 132

மேலே