கடன்

கடன்
ஏழை வீட்டின்
கல்யாணத்திலும் காதுகுத்திலும்
நோய் நொடியிலும்
ரம்ஜான் தீபாவளியிலும்
அழையா விருந்தாளியாய்
உள்ளே நுழைந்து
வட்டிக்கு ஈடாக
நிம்மதியை எடுத்துகொண்டு
இலவச இணைப்பாக
கண்ணீரையும் கவலையையும்
தந்துவிடுகிறது...
பாமரனின் பரம்பரை சொத்தானது ..........
பாழாய் போன கடன்