நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி - 2015

அதிவேக உணவை
அமிழ்தமென உண்டவன்....!
ஆறடி உடல் அவதிப்படுகையில்
ஆதி கால உணவை அதிமதுரமென்பான்....!

அந்தர அங்கங்கள் வெளிப்படும்
நாகரீக உடையில் நாட்டம் கொண்டவள்...!
நாளைய துளிர்விடும், ஆபத்தினையுணர்ந்து
சேலைகட்ட பயிற்சி எடுப்பாள்...!

ஆங்கில அறிவு கூடத்தில் தன்
அரும்புகள் ஆர்ப்பரிக்க ஆசைபடுவான்....!
ஆத்திச்சூடியை திக்கி திணறி சொன்னாலும்
கத்தி கத்தி சொல்வான், இது செந்தமிழ் என....!

நஞ்சு உரத்தை நன்னிலத்தில் தூவி...!
நடவு நிலம் மலடானதை
மனதில் கொண்டு, மாலை சூடுவான்....!
மக்கிய இலை தழை உரத்திற்கு....!

பித்ருக்களுக்கு பிண்டம் இடுவதை மறந்து....!
பிறந்த நாளை பேரின்பமாய் கொண்டாடியவன்....!
பிடிப்பற்ற வாழ்நாளில் பிதற்றுவான்....!
பிரிந்து போன தன் பிள்ளைகளை நினைத்து....!

மேல் நாட்டு கலாச்சாரத்தில்
மிதந்து மிடுக்காய் திரிந்தவன்....!
தொலைந்து போன தமிழ் கலாச்சாரத்தை
தோண்டி எடுப்பான் தன் கணினி அறிவால்....!

இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
பெயர் : பெ. கோகுலபாலன்
வயது : 54
முகவரி - #2, 30வது தெரு, தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், சென்னை - 61.
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 9444079620

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (11-Jan-15, 10:38 am)
பார்வை : 83

மேலே