இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதை போட்டி 2015
மண் வளம் காக்க
மானுடம் செழிக்க
உயிர்வளி (ஆக்சிஜன்)
தரும் பச்சையம் கொண்ட
தருக்களை காதலிப்போம்...!!!
உயிர் வளம் காக்க
வானில் இருந்து
வற்றாத ஜீவ நதியாய்
மண் வரும் மழையை
மனதார காதலிப்போம்...!!!
வாழ்வின் இருபக்கமாய்
இரவும் பகலும் தரும்
இனிய இயற்கையை
இச்சையோடு காதலிப்போம்...!!!
மனமொடு மயக்கம் தரும்
மற்றவர்க்கு உதவிடும்
நல்மனதை காதலிப்போம்...!!!
இதுவரை எப்படியோ
இனிமேல் நாம்
இப்படியாகவே காதலிப்போம்...!!!