புதுவெள்ளம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : புதுவெள்ளம் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 11 |
உன் சிறிய சிணுங்களில்
நான் சிதறி போகிறேன்
உன் விழியோர அசைவினில்
விழுந்து போகிறேன்
இதழோர சிரிப்பில்
இரக்கமே இல்லாமல்
கொல்கிறாயடி.
தொலைந்து போன
என்னை எங்கே
என்று தேடுவேனடி.
ஏக்கத்தின் எண்ணிக்கை
எல்லை தாண்டி சென்றுவிட்டதடி.
கடிகார நொடி முள்ளாய்
காலமெல்லாம் சுற்றி வருவேனடி.
மண் வளம் காக்க
மானுடம் செழிக்க
உயிர்வளி (ஆக்சிஜன்)
தரும் பச்சையம் கொண்ட
தருக்களை காதலிப்போம்...!!!
உயிர் வளம் காக்க
வானில் இருந்து
வற்றாத ஜீவ நதியாய்
மண் வரும் மழையை
மனதார காதலிப்போம்...!!!
வாழ்வின் இருபக்கமாய்
இரவும் பகலும் தரும்
இனிய இயற்கையை
இச்சையோடு காதலிப்போம்...!!!
மனமொடு மயக்கம் தரும்
மற்றவர்க்கு உதவிடும்
நல்மனதை காதலிப்போம்...!!!
இதுவரை எப்படியோ
இனிமேல் நாம்
இப்படியாகவே காதலிப்போம்...!!!
தை நாளின் முன்னாளில்
பழையதை அழிக்கும் போகியில்
நம் மன அழுக்கில் இருக்கும்
சாதிக் குப்பையையும்
தீயிட்டு கொளுத்து...!!!
சாதியால் நிகழும்
காதல் பிரிவையும்
கௌரவ கொலைகளையும்
சாபமிட்டு விரட்டி விடு...!!!
மனிதனை மதமாய் பார்க்கும்
மண்புதை எண்ணம் மறைத்து
மானுடம் வளர்க்கும்
மனிதம் வளரவிட்டு
மக்களை மக்களாய் வாழ விடு...!!!
மண் வளம் காக்க
மானுடம் செழிக்க
உயிர்வளி (ஆக்சிஜன்)
தரும் பச்சையம் கொண்ட
தருக்களை காதலிப்போம்...!!!
உயிர் வளம் காக்க
வானில் இருந்து
வற்றாத ஜீவ நதியாய்
மண் வரும் மழையை
மனதார காதலிப்போம்...!!!
வாழ்வின் இருபக்கமாய்
இரவும் பகலும் தரும்
இனிய இயற்கையை
இச்சையோடு காதலிப்போம்...!!!
மனமொடு மயக்கம் தரும்
மற்றவர்க்கு உதவிடும்
நல்மனதை காதலிப்போம்...!!!
இதுவரை எப்படியோ
இனிமேல் நாம்
இப்படியாகவே காதலிப்போம்...!!!
கற்காலத்தில் கனிந்த தமிழ்
வள்ளுவன் வாழ்வித்த தமிழ்
உ.வே.சா உருவேற்றிய தமிழ்
பாரதியை பைங்கவியாக்கிய தமிழ்
கனக சுப்புவை பா வேந்தனாக்கிய தமிழ்
திரு. வி. க தெருதோறும் போற்றி வளர்த்த தமிழ்
திசை எங்கும் பரவி இசை பெற்ற தமிழ்
இப்புவியில் நாளை வாழுமோ என
துளியும் ஐயம் கொள்ள வேண்டாம்....
இக்காலத்திலும் எம் தீந்தமிழ்
இணையத்தின் வழியே இன்னும் வளரும்
நாளைய தமிழும் நலமுடன்
வாட்ஸ் அப்பிலும் கூகுளிலும்
வண்ண மயமாய் வளரும்.
தமிழன் தமிழனாய் வாழ்கிறானா?
திசை பல சென்றவன் பொருளோடு
புகழும் சேர்த்தான் தன் சுய மூலத்தை மறந்து...
பிழைக்க போன இடத்தில தன்னையும்
தமிழ் மொழியையும் மறந்த
அவளை பார்த்து முதல் கவிதை
-----------------------------------------
அசையாமல்
குலுங்காமல்
நடந்தாலும்
சிந்துகிறது
உன் இதழில்
புன்னகை ..
அவளை பார்த்து முதல் கவிதை
-----------------------------------------
அசையாமல்
குலுங்காமல்
நடந்தாலும்
சிந்துகிறது
உன் இதழில்
புன்னகை ..
விஜய் டிவியில்.... நேற்றைய.... நீயா.. நானா.. வில்
ஒரு பெண்மணி சொல்கிறார்..” நான் கட்டிய சாரி போல.. எனது உயர் அதிகாரி கட்டியிருந்தால்.. மேடம் இது போலவே சாரி என்னிடமும் இருக்கிறது என்று பெருமையாக கூறுவேன்.. அதுவே எனக்கு கீழே வேலை செய்யும் ஸ்வீப்பர் கட்டியிருந்தால்.. என் சாரியை அதற்குப்பிறகு கட்டவே மாட்டேன். ஒரு ஸ்வீப்பர் கட்டியது போன்ற சாரியை நாம் கட்டுவதா என்று தூக்கி எறிந்துவிடுவேன். ”
நம் சமூகத்தில் இதுவும் ஒரு வகை தீண்டாமை வன்கொடுமையோ??
நேற்றிரவு
சண்டையின்
மிச்சத்தை
அடைகாத்த
மௌனத்தை -
பலபடுத்த
என் ஆணும்
உன் பெண்ணும்
முயற்சித்த
வேளையில்
நம் மௌனத்தை
உடைத்த
கரப்பான் பூச்சிக்கு
நன்றி !
பால்ய கால
நண்பனின் மரணம்
என் இதய பாசிகளை
துடைத்து என்னை
தூய்மை ஆக்கியவன்.
இதயத்தின்
ஆரிகலாகவும்
வென்றிகலாகவும்
இருந்தவன்.
உயிரோடு
இருக்கும் வரை
என் உயிர்
உணர்வுகளின்
உடைமையானவன்.
மரணத்தின் மூலம்
இதய துடிப்பை
சில நொடிகள்
நிறுத்தியவன்.
உயிரோடு
இருக்கும் போதே
செயலிழந்த
உடல் உருப்பானவன்.
திடீரென
நின்று போன
காற்று மண்டலம்
போன்றவன்.
நண்பனின் மரணம் -
நம் வாழ்க்கை
ஏடுகளின்
சில பக்கங்களை
இழந்து தேடுவது.....
காத்திருக்கும்
ஒவ்வொரு
நிமிடமும்
ஒரு யுகம்தான்.
காத்திருப்பது
காதலிக்காக
அல்ல.
மீண்டும்
என்னை
கருவில்
சுமக்க
போகும்
கடவுளுக்காக!!!